திருவள்ளூரில் அதிகாரிகளின் அலட்சியத்தால் உயிரிழப்புகள் அதிகரிப்பதாக மக்கள் குற்றச்சாட்டு!

திருவள்ளூர் அரசு மருத்துவமனை

ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரனுக்கு சொந்தமான இந்திரா மருத்துவமனைக்கு மாற்றப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

 • Share this:
  திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாத நிலையில், அதிகாரிகளின் அலட்சியத்தால் உயிரிழப்புகள் அதிகரிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

  திருவள்ளூர் மாவட்டம் குன்னவலம் கிராமத்தில் உள்ள டிடி தனியார் மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் கடந்த அதிமுக ஆட்சியின் போது ஒரே நேரத்தில் மூவாயிரம் பேர் படுக்கை, கழிப்பறை வசதிகளுடன் சிகிச்சை பெற ஏற்பாடு செய்யப்பட்டது.

  இந்த சிகிச்சை மையத்தின் மூலம் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் குணமடைந்தனர். தற்போது இரண்டாவது அலை கொரோனா தாக்கத்தால் திருவள்ளூரில் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் இல்லாததால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது.

  ஆனால் டிடி தனியார் மருத்துவமனை வளாகத்தில் சுமார் 200 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் இருக்கும் போதும் அவற்றை பயன்படுத்த அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

  மேலும் அந்த மையத்தில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரனுக்கு சொந்தமான இந்திரா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அங்கு போதிய மருத்துவர்கள் இன்றி கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

  செய்தியாளர் - கண்ணியப்பன்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: