திறப்பு விழாவிற்காக கண்ணைக் கவரும் விதமாக காத்திருக்கும் திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரியை காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி வருகிற 12 ஆம் தேதிகு காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.
திருவள்ளூரில் ரூ.185 கோடி செலவில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டுவதற்காக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. கல்லூரி கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தது. 60 சதவீதம் மத்திய அரசு நிதி மற்றும் 40 சதவீதம் மாநில அரசு நிதியில் 190 கோடி செலவில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் 185 கோடியில் அரசு மருத்துவமனை கட்டுமானப் பணி நடைபெற்றன. அதில் சுமார் இருபத்து இரண்டு ஏக்கரில் திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி கட்டி முடிக்கப்பட்டு அதிநவீன வசதிகளுடன் அழகிய தோற்றத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
Also Read: ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவை
அரசு மருத்துவக் கல்லூரியில் 5 மாடி கட்டிடம் பயிற்றுநர்கள் அறை, நவீன உடற்பயிற்சி கூடம் 2 மாடி அட்மினிஸ்ட்ரேஷன் பிளாக் கல்லூரியில் 2 மாடியில் அட்மினிஸ்டர்ட் பிளாக் நவீன உடற்பயிற்சி கூடம் உணவகம் பொதுப்பணித்துறை கட்டிடம் கட்டிடம் அரசு வங்கி கட்டடம் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கும் இடம் 750 இருக்கைகள் வசதியுடன் கொண்ட பிரமாண்ட ஆடிட்டோரியம் தியேட்டர் 500 இருக்கைகள் உடன் கூடிய அதிநவீன தேர்வு கட்டிடம் சுமார் நான்காயிரம் புத்தகம் கொண்ட இரண்டு நூலகம்,25 கம்ப்யூட்டர் வசதியுடன் கூடிய e-library 86 அறைகளை கொண்ட மாணவர் மாணவியர் தங்கும் விடுதி 3 ஸ்மார்ட் போர்டு பணியாளர்கள் தங்கும் குடியிருப்பு வசதி 100 மாணவர்களுக்கு சிஆர்ஆர்ஐ ட்ரைனிங் skill லேப் என பல்வேறு அதிநவீன வசதிகளுடன் கூடிய பிரமாண்ட அரசு மருத்துவக் கல்லூரி கட்டி முடிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து வருகிற 12-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி விருதுநகர் மாவட்டத்தில் இருந்து இந்த அரசுக்கல்லூரியை திறந்து வைக்க உள்ளார். மேலும் 100 மாணவர்கள் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் கவுன்சிலிங் முடிந்து இதில் மாணவர்கள் சேர்ந்து இந்தக் கல்வி ஆண்டிலேயே மருத்துவக் கல்வியைப் பயிலும் நிலையை மத்திய மாநில அரசுகள் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்: பார்த்தசாரதி ( திருவள்ளூர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Medical College, Medical Students, Modi, Thiruvallur