அறிவிக்கப்படாத மின்வெட்டால் விவசாயிகள் அவதி - விவசாய பணிகள் செய்ய முடியவில்லை என வேதனை

Youtube Video

முறையாக மின் விநியோகம் செய்யப்படாததால் விளைநிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

  • Share this:
திருவள்ளூர் மாவட்ட கிராமங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். விளைநிலங்களுக்கு தண்ணீர் கூட பாய்ச்ச முடியவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கத்தூர், நுங்கம்பாக்கம், கீழ் நல்லாத்தூர், பேரம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த 3 வாரங்களாகவே இந்த பகுதிகளில் பகல் நேரங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுகிறது. இரவு நேரங்களிலும் மின்வெட்டு ஏற்படுவதால் மக்கள் இருளில் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக புகார் அளிக்க மணவாளநகர் மின்வாரிய அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டால், உரிய பதில் அளிக்கப்படுவதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் ஆன்லைனில் கல்வி கற்கும் மாணவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பேரம்பாக்கம் மின் நிலையத்தில் இருந்து, முறையாக மின் விநியோகம் செய்யப்படாததால் விளைநிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். கருகிய பயிர்களுடன் திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரனிடம் புகார் அளித்தனர்.

இந்நிலையில் சீரான மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் உறுதி அளித்துள்ளார்.
Published by:Yuvaraj V
First published: