முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அம்பத்தூரில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.72 லட்சம் மூன்றே நாட்களில் மீட்பு - போலீசார் துரித நடவடிக்கை...

அம்பத்தூரில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.72 லட்சம் மூன்றே நாட்களில் மீட்பு - போலீசார் துரித நடவடிக்கை...

கொள்ளை தொடர்பாக 4 பேர் கைது

கொள்ளை தொடர்பாக 4 பேர் கைது

Chennai Crime News | தனியார் நிறுவனத்தை சேர்ந்த விஜயகுமார் கடந்த 10 ஆம் தேதி 82 லட்ச ரூபாய் பணத்துடன் மதுரவாயில் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே பைபாஸ் சாலை மேம்பாலத்தில் தனியார் நிறுவன ஊழியரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் 72 லட்ச ரூபாயை மீட்டுள்ள காவல்துறையினர் 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

200க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து 3 நாட்களில் குற்றவாளிகளை பிடித்திருக்கிறது காவல்துறை. தனியார் நிறுவனத்தை சேர்ந்த விஜயகுமார் கடந்த 10 ஆம் தேதி 82 லட்ச ரூபாய் பணத்துடன் மதுரவாயல் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது.

விஜயகுமாரை வழிமறித்த சிலர், அவரை கடுமையாக தாக்கிவிட்டு பணத்துடன் தப்பி சென்றனர். சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விஜயகுமார் பணத்தை எடுத்துக்கொண்டு கிளம்பிய இடம் முதல் கொள்ளை நடைபெற்ற இடம் வரை வழி முழுவதும், 200 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

இதில் 3 பேர் இருசக்கர வாகனத்தில் விஜயகுமாரை பின் தொடர்ந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, கொள்ளை வழக்கு ஒன்றில் சிறை சென்று வந்த சுப்பிரமணி என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

Also read... 400 கிலோ கடல் அட்டைகள் மாயம் - வனத்துறை ஊழியர் தலைமறைவு

அதில், சிறையில் இருந்த போது புதிய கூட்டாளிகளை பழக்கப்படுத்தி கொண்டு, சுப்பிரமணி இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து, பள்ளிக்கரணையை சேர்ந்த அப்புன், தனுஷ், சந்துரு ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்கள் பதுக்கி வைத்திருந்த 72 லட்ச ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட பணம் 10 லட்ச ரூபாய் என்னவானது என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-செய்தியாளர்: கன்னியப்பன்.

First published:

Tags: Crime News, Theft, Thiruvallur