ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

திருவள்ளூரில் பகல் 12 மணிக்கு மேல் கடைகளை திறந்து வைத்திருந்த வியாபாரிகளிடம் அபராதம்

திருவள்ளூரில் பகல் 12 மணிக்கு மேல் கடைகளை திறந்து வைத்திருந்த வியாபாரிகளிடம் அபராதம்

வியாபாரிகளிடம் அபராதம் வசூலிக்கும் துணை ஆட்சியர்

வியாபாரிகளிடம் அபராதம் வசூலிக்கும் துணை ஆட்சியர்

திருவள்ளூர் பஜார் வீதியில் துணை ஆட்சியர்  ஜோதி தலைமையிலான அதிகாரிகள் பிற்பகல் 12.30மணிக்கு ஆய்வு செய்தனர். அதில் 12 மணிக்கு மேல் வியாபாரம் செய்து கொண்டிருந்த வியாபாரிகளிடம் ரூ.200 அபராதமாக வசூல் செய்தனர். 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  கொரானா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு பகல் 12 மணி வரை மட்டுமே அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள் பழங்கள் மற்றும் மளிகை ஆகியவை திறக்கவேண்டும் என அறிவுறுத்தியுள்ள நிலையில், பகல் 12 க்கு மேல் கடைகளை நடத்திய வியாபாரிகளிடம் துணை ஆட்சியர் அபராதமாக  ரூ.200   வசூலித்தார்.

  தமிழகத்தில் கொரானா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது அதில் ஒன்று அத்தியாவசிய பொருட்கள் காய்கறி கடை மளிகை கடை பழக்கடை ஆகியவை காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை இயங்க வேண்டும் என விதிமுறையை வகுத்துள்ளனர்.

  இந்த நிலையில் திருவள்ளூர் பஜார் வீதியில் துணை ஆட்சியர்  ஜோதி தலைமையிலான அதிகாரிகள் பிற்பகல் 12.30மணிக்கு ஆய்வு செய்தனர். அதில் 12 மணிக்கு மேல் வியாபாரம் செய்து கொண்டிருந்த வியாபாரிகளிடம் ரூ.200 அபராதமாக வசூல் செய்தார்.

  மேலும் அடுத்த முறை இதுபோல் வியாபாரம் செய்வது தெரிந்தால் கூடுதல் அபராதம் விதிப்பதுடன் உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படும் என எச்சரிக்கை விட்டுச் சென்றார்.

  Published by:Esakki Raja
  First published:

  Tags: Lockdown, Thiruvallur