Home /News /tamil-nadu /

எண்ணூரில் நிலக்கரி கொண்டு செல்லும் டிப்பர் லாரி உரிமையாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்

எண்ணூரில் நிலக்கரி கொண்டு செல்லும் டிப்பர் லாரி உரிமையாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்

டிப்பர் லாரி போராட்டம்

டிப்பர் லாரி போராட்டம்

Lorry Strike | இரண்டு வருடங்களுக்கு முன்னர்2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏற்றப்பட்ட லாரி வாடகை   கடந்த இரண்டு ஆண்டுகளாக   உயர்த்தப்படவில்லை.

திருவள்ளூரில் நிலக்கரி கொண்டு செல்லும் டிப்பர் லாரி வாடகை கட்டணத்தை 30 சதவீதம் உயர்த்தி வழங்க.கோரி லாரி மற்றும் டிப்பர் லாரி உரிமையார்கள் சங்கத்தினர் இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை  எண்ணூர் காட்டுபள்ளி சுற்றுவட்டார லாரி மற்றும் டிப்பர் லாரி உரிமையார்கள்  சங்கத்தினர் டீசல் விலை உயர்வு வாகன உதிரிபாக விலை உயர்வு போன்ற காரணங்களால் டிப்பர் லாரி உரிமையாளர்கள் தங்களது தொழில் செய்ய  முடியாமல் கடும் நஷ்டம் அடைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர்2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏற்றப்பட்ட வாடகை   கடந்த இரண்டு ஆண்டுகளாக   உயர்த்தப்படவில்லை. டீசல் விலைய உயர்வு, சுங்கவரி கட்டணம், உதிரிபாங்கள் போன்றவை விலை உயர்ந்த  நிலையில் தங்களுக்கான வாடகை கட்டணம்டன் ஒன்றுக்கு  400 ரூபாய் முதல் 450 ரூபாய் வரை மட்டுமே வழங்கப்படுவதாகவும் 30 சதவீதம் வாடகையை  கூடுதலாக உயர்த்தி வழங்க வேண்டும்.

Also Read : உயிரை கொடுத்தாவது தருமபுரம் ஆதீனம் பட்டின பிரவேசத்தை நடத்துவோம் - மதுரை ஆதினம்

நிலக்கரியானது  லாரிகள் மூலம் ஆந்திரா பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களுக்கும் 5000-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் இரும்பு உருக்கு ஆலை செங்கல் சூளை தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி கொண்டு செல்வதாகவும் தங்களது வாழ்வாதாரம் கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளது.

எனவே வாடகை கட்டணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் கால வரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து டிப்பர் லாரிகளை இயக்காமல் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நிலக்கரி டிப்பர் லாரி வேலைநிருத்தப்போராட்டம் காரணமாக தனியார் மின் உற்பத்தி  நிலையங்கள்  இரும்பு உருக்குஆலைகளுக்கும்  நிலக்கரி கொண்டு செல்லும் பணிகள் இரண்டாவது நாளாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

செய்தியாளர் : பார்த்தசாரதி, திருவள்ளூர்
Published by:Vijay R
First published:

Tags: Lorry strike, Thiruvallur

அடுத்த செய்தி