சிலம்பம் போட்டியில் தேசிய அளவில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் வென்ற வடசென்னை மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
புதுடெல்லியில் முங்கேஷ்பூரில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் சென்னை எண்ணூரில் சேர்த்த எண்ணூர் சிலம்ப ஆசான் துறை அவர்களின் மாணவர்கள் பெண் உட்பட 6 பேர் தங்கப்பதக்கம் வென்று வீடு திரும்பிய அவருக்கு ரயில் நிலையத்திலிருந்து தாரை தப்பட்டை மாலை மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
50 வருடங்களாக எண்ணூரில் துரை ஆசான் என்பவர் இலவசமாக பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு தற்காப்புக் கலையான சிலம்ப கலையை கற்றுத் தந்து வருகிறார். இங்கு பயிற்சி பெற்ற மாணவர்கள் ஆகாஷ், ஆல் பிரதோஷ், மனோஜ், ஸ்ரீநாத், தனஞ்செழியன் காயத்ரி உன்கிட்ட ஆறு பேர் கடந்த 3 மாதத்திற்கு முன்பு காஞ்சிபுரம் மற்றும் ஒய்எம்சிஏவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் தேர்வு செய்யப்பட்டனர்.
பின்னர் தலைநகர் டெல்லியில் முங்கேஷ்பூரில் இந்த மாதம் 26, 27, 28 ஆகிய மூன்று ஆட்கள் நடைபெற்ற யூத் பெடரேஷன் ஆப் இந்தியா நடத்திய யூத் கேம் நேஷனல் சம்பியன்ஷிப் 2022 நடைபெற்ற தனித் திறமை மற்றும் தொடு சிலம்பம் உள்ளிட்ட போட்டிகளில் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர் இதில் அனைவரும் தங்கம் பதக்கம் வென்று இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்து அங்கிருந்து மின்சார ரயிலில் ஏறி எண்ணூர் ரயில் நிலையம் வந்தடைந்தனர்.
பயிற்சியாளர் மோகன், சிலம்ப ஆசான் துரை மற்றும் சிலம்பம் பயிலும் மாணவர்கள் பெற்றோர்கள் உள்ளிட்டோர் எண்ணூர் ரயில் நிலையம் வந்து தாரை தப்பட்டை உடன் மாலை கிரீடம் சால்வை அணிவித்து ஊர்வலமாக தாங்கள் பயிற்சி செய்யும் விளையாட்டு திடலுக்கு வந்தனர். இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
-செய்தியாளர்: அசோக்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.