திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுக்கப்பட்ட பச்சிளம் குழந்தை தாயை விட்டு பிரிய மனமில்லாமல் கத்திரிகோலை இறுக்கமாக பிடித்து கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் வடமாநில பெண் ஒருவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தையை தாயிடமிருந்து பிரித்து குழந்தை நல மருத்துவரிடம் வழங்க அறுவை சிகிச்சை செய்த அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவரான அனுரத்னா குழந்தை நல மருத்துவரிடம் கொடுக்க முயற்சி செய்தனர்.
Also Read : ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு இருக்கும் பெரிய சிக்கல் நீங்குகிறது - அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்

திருவள்ளூர் பச்சிளம் குழந்தை
அப்போது தாயின் வயிற்றிலிருந்து அறுவைசிகிச்சை செய்து எடுக்கப்பட்ட அக்குழந்தை தன் தாய் விட்டுச் செல்ல மனதின்றி சிகிச்சைக்கு பயன்படுத்திய கத்திரிக்கோலை மருத்துவர்களைப் போன்றே இறுக்கமாக பிடித்துக் கொண்டிருப்பதை கண்ட மருத்துவர் குழு வியப்பில் ஆழ்ந்தது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
செய்தியாளர் : பார்த்தசாரதி, திருவள்ளூர் இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.