முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கும்மிடிப்பூண்டி அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.1 கோடிக்கு மேல் மோசடி.. தாய், மகன் தலைமறைவு!!

கும்மிடிப்பூண்டி அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.1 கோடிக்கு மேல் மோசடி.. தாய், மகன் தலைமறைவு!!

கும்மிடிப்பூண்டி அருகே ஏலச்சீட்டு - தீபாவளி பண்டு சீட்டு நடத்தி சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துவிட்டு தாய், மகன் தலைமறைவாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஏலச்சீட்டுக்கு முறையாக பணம் செலுத்தி ஏமாந்தவர்கள்  திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் புது கும்முடிபூண்டி பாலகிருஷ்ணாபுரம் எல்.வி. நகரில் வசிக்கும் (லேட்) இளங்கோவன் என்பவரது மனைவி மாரியம்மாள் (50)  அவரது மகன் கிருபாகரன் (29). இவர்கள் இருவரும் ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி பண்டு சீட்டு பிடித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், சுமார் ஒரு கோடி ரூபாய் அளவிற்கு சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்களை ஏமாற்றிவிட்டு, குடியிருந்த வீட்டை விற்று விட்டு தப்பி ஓட்டம் எடுத்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, தலைமறைவான இருவரையும் கண்டு பிடித்து பணத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என பாதிக்கப்பட்டோர் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டிஎஸ்பி சந்திரதாசனிடம் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளனர்.

First published:

Tags: Crime News, Thiruvallur