ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அரசு மருத்துவமனையில் அதிக உயிரிழப்புகள்: அமைச்சர் முன்னிலையில் திமுக எம்.எல்.ஏ பகிரங்க குற்றச்சாட்டு!

அரசு மருத்துவமனையில் அதிக உயிரிழப்புகள்: அமைச்சர் முன்னிலையில் திமுக எம்.எல்.ஏ பகிரங்க குற்றச்சாட்டு!

சட்டமன்ற உறுப்பினர் வி ஜி ராஜேந்திரன்

சட்டமன்ற உறுப்பினர் வி ஜி ராஜேந்திரன்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டீனாக செயல்படும் மருத்துவர்  அரசி மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் ஆன மருத்துவர்  ராஜ்குமார் என்பவருக்கும்  இடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லை

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைப்பு இல்லாததால் உயிர் இழப்பு அதிக அளவு ஏற்படுகிறது என  கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஆய்வு கூட்டத்தில் திருவள்ளூர் திமுக சட்டமன்ற  உறுப்பினர் வி ஜி ராஜேந்திரன் பகிரங்க   குற்றச்சாட்டு தெரிவித்தார்.

  திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர்  நாசர் தலைமையில் கொரோனா  தடுப்பு நடவடிக்கைகள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது  இதில் அரக்கோணம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி ஜி ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் பொன்னையா மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மருத்துவர்கள் பங்கேற்றனர்.

  இதில் மாவட்டத்திலுள்ள பள்ளிப்பட்டு   திருத்தணி, பூண்டி, திருவள்ளூர், கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  திருவள்ளூர் நகராட்சி திருத்தணி நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை வழங்கினார். பின்னர் பேசிய திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி ஜி ராஜேந்திரன் ஆம்புலன்சில் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்ட 54 வயதுடைய நபர் ஒருவருக்கு இரண்டு மணி நேரமாக படுக்கை தர அங்குள்ள மருத்துவர் மறுத்ததால் ஆவடிக்கு கொண்டு செல்லும் வழியில் ஆம்புலன்சிலேயே பரிதாபமாக உயிரிழந்ததாகவும் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டீனாக செயல்படும் மருத்துவர்  அரசி மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் ஆன மருத்துவர்  ராஜ்குமார் என்பவருக்கும்  இடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லை என்றும் முறையான ஒத்துழைப்பு மருத்துவர்களுக்குள் இல்லாததால் இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் மருத்துவமனையில் நம்பகத்தன்மை இல்லாததால் நோயாளிகளுடன் அவர்களது  உறவினர்கள் உடன் தங்கி சிகிச்சை பெறும் நிலை உள்ளதாகவும் கூறினார்.

  உரியமுறையில் கொரோனா வார்டில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்ட்ரோல் ரூம் அமைத்து ஆக்சிஜன் படுக்கைகள் மற்றும் நோயாளிகளுக்கு வேண்டிய வசதிகளை உடனுக்குடன் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்றும் சரியான அணுகுமுறை இல்லாததால் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பெரிய கோளாறு நடைபெறுகிறது என்று பகிரங்கமாக திமுக சட்டமன்ற உறுப்பினர் வி ஜி ராஜேந்திரன் குற்றம்சாட்டினார்.

  Read More:   ஊரடங்கால் பசியுடன் போராடும் பார்வையற்றோர்.. ரயில்களில் பொம்மைகள் விற்று பிழைப்பு நடத்தியவர்களின் அவலம்..

  மேலும் நோயாளிகளுடன் உறவினர்கள் தங்குவதால் நோய் தொற்று அதிகமாக பரவும் நிலை உள்ளதாக தெரிவித்த அவர் திருவள்ளூர் நகராட்சியில் தடுப்பூசி போடும் பணியை அதிகரிக்க வேண்டும் எனவும் காய்கறி உள்ளிட்ட வாகனங்களை கிராமப்புறங்களுக்கு அதிக அளவு கொண்டு சென்று வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் வைத்தார்.

  திருவள்ளூர் செய்தியாளர் பார்த்தசாரதி

  Published by:Arun
  First published:

  Tags: Covid-19, DMK, MLA, Thiruvallur