முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கடந்த 10 ஆண்டுகளாக சிறுபான்மை நலத் திட்டங்கள் முறையாக அமல்படுத்தப்படவில்லை - பீட்டர் அல்போன்ஸ்

கடந்த 10 ஆண்டுகளாக சிறுபான்மை நலத் திட்டங்கள் முறையாக அமல்படுத்தப்படவில்லை - பீட்டர் அல்போன்ஸ்

சிறுபான்மை நலத்துறை ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ்

சிறுபான்மை நலத்துறை ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ்

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக சிறுபான்மை நலத் திட்டங்கள் முறையாக அமல்படுத்தப்படவில்லை என தமிழ்நாடு சிறுபான்மை நலத்துறை ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்,

  • Last Updated :

தமிழகத்தில் சட்டத்துக்கு விரோதமாக ஆக்கிரமித்துள்ள கிறிஸ்துவ, இஸ்லாமிய வக்பு வாரிய நிலத்தை அரசு  மீட்க நடவடிக்கை எடுக்கும் என்று தமிழ்நாடு சிறுபான்மை நலத்துறை ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்,

திருவள்ளுர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுபான்மை நலத்துறை பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டமானது  திருவள்ளுர் மாவட்ட ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மையத்தில் நடைபெற்றது .இதில் தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அம்மக்களுடன் ஆலோசனை மேற்கொண்டு கோரிக்கை மனுக்களை பெற்று அவர் 3 லட்சத்து 79 ஆயிரத்து 442 ரூபாய் நிதியில் 32 பயனாளிகளுக்கு தையல், இயந்திரம், சலவை பெட்டி, கடனுதவி வழங்கினார்.

Also Read:   உங்கள் குழந்தைக்கு இன்னும் ஆதார் அட்டை பதிவு செய்யவில்லையா? வீட்டில் இருந்தே விண்ணப்பிக்கலாம்

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக சிறுபான்மை நலத் திட்டங்கள் முறையாக அமல்படுத்தப்படவில்லை எனவும்அவைகள் வாய் மொழியாக மட்டும் தான் இருந்ததே தவிர அது செயல்படுத்தப்படவில்லை என்று  அவர் குற்றம்சாட்டினார்,

சிறுபான்மையினர் நலத்துறை திட்டங்கள் இந்த ஆட்சியில் ஊக்கப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்,

சிறுபான்மை மக்கள் ஈமச்சடங்கு செய்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும் ,அதனால் கல்லறைகள் அவர்களுக்கும் இடம் இல்லாமல் தவித்து வருவதால் முதல்வரிடம் இதுதொடர்பாக வலியுறுத்தப்படும் என அவர் கூறினார்.

Also Read:   புதுச்சேரியில் இனி பெட் பாட்டிலில் சாராயம்... குடிமகன்களின் கோரிக்கையை ஏற்று அரசு ஏற்பாடு..

சிறுபான்மை பெண்கள் இஸ்லாமிய பெண்களுக்கு கடன் உதவி, கடந்த ஆண்டு பங்கு தொகையை அவர்கள் செலுத்தினாலும் ஆனால் அரசு அவர்களுக்கு கடனுதவி முறையாக அளிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்,  இந்த ஆண்டு சிறுபான்மை நலத்துறை வாயிலாக பெண்களுக்கு தொய்வில்லாமல் கடனுதவி இந்த அரசு வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிகழ்ச்சியில் சிறுபான்மை ஆணையத்தின் உறுப்பினர் செயலர் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்,

top videos

    செய்தியாளர் ஆர்.எல். பார்த்தசாரதி, திருவள்ளூர்

    First published:

    Tags: Thiruvallur