Home /News /tamil-nadu /

தமிழகத்தில் பால் விலை உயர்வு? அமைச்சர் நாசர் விளக்கம்

தமிழகத்தில் பால் விலை உயர்வு? அமைச்சர் நாசர் விளக்கம்

 பால்

பால்

Milk Price Hike | பால் விலை உயர்த்துவதற்கான வாய்ப்பே இல்லை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அறிக்கைக்கு பால்வளத்துறை அமைச்சர் நாசர் பதில் அளித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வருகின்ற ஏப்ரல் 1 ஆம் தேதி புத்தக கண்காட்சி நடைபெற இருப்பதால் கண்காட்சி அரங்க ஏற்பாடுகளை அமைச்சர்.நாசர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், பால் விலை உயர்த்துவதற்கான வாய்ப்பே இல்லை எனவும் ஓ.பன்னீர்செல்வம் தூங்கிக் கொண்டே இருப்பதாகவும், அவர்கள் ஆட்சி காலத்தில்  லிட்டர் 6  ரூபாய் பால் விலை உயர்த்தி இருந்ததாக தெரிவித்தார்.

மேலும்  தமிழக முதல்வர் பொறுப்பை ஏற்றவுடன் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிப்படி பால் விலையை 3  ரூபாய் குறைத்து உத்தரவிட்டார். இதனால்  அரசுக்கு மாதம்  220 கோடி ரூபாய்  நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்காக பால் விலை உயர்த்துவதற்கான வாய்ப்பே இல்லை என திட்டவட்டமாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Also Read : ஸ்வீட் பாக்ஸ் முதல் சாதி பேர் வரை ... ராஜகண்ணப்பனும் சர்ச்சைகளும்

ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற உள்ள புத்தகக் கண்காட்சியில் மாணவர்கள் இளைஞர்கள் பொதுமக்கள் பங்கேற்று வாசிப்புத் திறனை மேம்படுத்தி கொள்ள வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டுள்ளார் இந்நிகழ்ச்சியில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் : பார்த்தசாரதி, திருவள்ளூர்
Published by:Vijay R
First published:

Tags: Milk, Thiruvallur

அடுத்த செய்தி