Home /News /tamil-nadu /

காதலி பேசாததால் காதலன் எடுத்த விபரீத முடிவு - திருவள்ளூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

காதலி பேசாததால் காதலன் எடுத்த விபரீத முடிவு - திருவள்ளூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

தற்கொலை செய்துக்கொண்ட செந்தில் குமார்

தற்கொலை செய்துக்கொண்ட செந்தில் குமார்

காதலி பேச மறுத்ததால், காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருநின்றவூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    திருநின்றவூரில் கருத்து வேறுபாடு காரணமாக, காதலி பேச மறுத்ததால், காதலன் மண விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர், பெரியார் நகர், திருவள்ளுவர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 24). இவர் பெயிண்டராக வேலை செய்து வந்தார். இதற்கிடையில், செந்தில்குமாருக்கும், இதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர், இந்த பழக்கம் காதலாக மாறியது. இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.

    இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு செந்தில்குமாருக்கும், இளம்பெண்ணுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து, செந்தில்குமாரிடம் கடந்த 4நாட்களாக இளம்பெண் பேசாமல் இருந்துள்ளார்.

    இதனால், அவர் மனமுடைந்து இருந்து உள்ளார். இந்நிலையில், நேற்று செந்தில்குமாரின் பெற்றோர் திருவள்ளூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர்.  அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

    Also Read: புழல் சிறை கைதி மர்ம மரணம் - கண்ணீர் வடிக்கும் மனைவி

    இதற்கிடையில், இன்று காலை செந்தில்குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இருந்தார். தகவல் அறிந்த திருநின்றவூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    பின்னர், போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், புகாரின் அடிப்படையில் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்தியாளர்: கன்னியப்பன் 

    -----------------------------------------------------------------------------------------------

    மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Commit suicide, Crime | குற்றச் செய்திகள், Love issue, Tamil News

    அடுத்த செய்தி