முகப்பு /செய்தி /தமிழ்நாடு / நிலப்பிரச்னையில் மகளை குத்திக்கொன்ற சித்தப்பா.. திருவள்ளூரை அதிர வைத்த சம்பவம்

நிலப்பிரச்னையில் மகளை குத்திக்கொன்ற சித்தப்பா.. திருவள்ளூரை அதிர வைத்த சம்பவம்

திருவள்ளூர் கொலை

திருவள்ளூர் கொலை

சித்தப்பாவே மகளை சரமாரியாக குத்திக்கொன்ற சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

திருவள்ளூர் ரயில்வே நிலையம் அருகே நில பிரச்சினையில் சிறிய தகப்பனார் கத்தியால் வெட்டியதில் இளம்பெண் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்

திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 27வது வார்டு கற்குழாய் தெருவில் வசிப்பவர் லோகநாயகி வெங்கடாசலபதி. லோகநாயகிக்கும் அவரது சகோதரிகளுக்கும் குடியிருப்பு நிலம் சம்பந்தமாக பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வந்துள்ளது, இந்த நிலையில் நிலம் சம்பந்தமாக இன்று காலை லோகநாயகி வெங்கடாஜலபதி குடும்பத்தினருக்கும் சரஸ்வதி பாலச்சந்தர் குடும்பத்தினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சனையில் இரு தரப்பிற்கும் வாக்குவாதம் முற்றியதில் லோகநாயகி குடும்பத்தினர் சரஸ்வதி குடும்பத்தினர் மீது வழக்குப் கொடுக்கப்போவதாக தெரிவித்துள்ளனர்.

Also Read: கடைசியாக பார்த்து சென்ற காதலி..உருக்கமாக கடிதம் எழுதிவைத்து உயிரைவிட்ட இளைஞர்

இதில் ஆத்திரமடைந்த சரஸ்வதியின் கணவர் பாலச்சந்தர் (வயது 39) கத்தியால் லோகநாயகியின் மகள் சிவரஞ்சனியை 7 இடங்களில் கொடூரமாக குத்தியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த சிவரஞ்சனியை மீட்டு திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் நகர காவல் துறையினர் பாலசந்தர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து செய்தனர்  மேலும் சித்தப்பாவே மகளை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர்: பார்த்தசாரதி  ( திருவள்ளூர்)

First published:

Tags: Crime News, Criminal case, Death, Murder, Police, Thiruvallur