ஆளுநரின் தேநீர் விருந்தை ஒருசில அரசியல் கட்சிகள் புறக்கணிந்தததால் தேநீர் செலவு மிச்சம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்திருந்த நிலையில், ராஜ்பவன் கணக்குப் பிள்ளையாக அண்ணாமலை எப்போது மாறினார் என தி.க தலைவர் வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
திருத்தணியில் திராவிட கழகத்தின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தி.க தலைவர் வீரமணி கலந்து கொண்டார். இதில் பேசிய அவர், தமிழகத்தில் உள்ள அனைத்து பெரும்பான்மை கட்சிகளும் நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தால் இந்த தீர்மானத்தை இந்திய ஜனாதிபதிக்கு அனுப்பாமல் போஸ்ட்மேன் வேலைபார்க்கும் தமிழக ஆளுநர் இதனை செய்யாமல் நீட் தேர்வு இந்த எதிர்ப்பு மசோதாவை அனுப்பி வைக்காமல் பிரித்து படிப்பது, இதில் குறை உள்ளது என்று அமைச்சர்களை அழைத்து கூறுவது எந்த விதத்தில் நியாயம் என தெரிவித்துள்ளார்.
மேலும் , அரசியலமைப்பில் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படாமல் ஆளுநர் பொறுப்பில் செயல்படாமல் இவருக்கு அனுப்பப்பட்ட தீர்மானத்தை ஜனாதிபதிக்கு அனுப்பாமல் குறை கூறுவது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து பேசியவர் நீட் தேர்வுக்கு எதிரான சட்டமசோதாவை அவமதிப்பு செய்ததால் அவர் ஏற்பாடு செய்த தேனீர் விருந்து நிகழ்ச்சியை அரசியல் கட்சிகள் புறக்கணித்தன. ஆனால் தமிழக மக்களின் நலம் என்று கருதாமல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டீ விருந்தில் இவர்கள் கலந்து கொள்ளவில்லை என்றால் டீ விருந்து செலவு மிச்சம் என்று கூறுகிறார்.
இவர் எப்போது தமிழக ராஜ் பவன் கணக்குப் பிள்ளையாக மாறினார் என்று கேள்வி எழுப்பினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன், திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எம். பூபதி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிட முன்னேற்ற கட்சியை சேர்ந்த மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : சசி குமார்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.