Home /News /tamil-nadu /

‘அம்பேத்கரை மோடியுடன் ஒப்பிட்டு பேசியது தவறு’ – இளையராஜாவுக்கு ஜான் பாண்டியன் கண்டனம்

‘அம்பேத்கரை மோடியுடன் ஒப்பிட்டு பேசியது தவறு’ – இளையராஜாவுக்கு ஜான் பாண்டியன் கண்டனம்

தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன்

தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன்

எதேச்சதிகாரத்திற்கு எதிராக, ஜனநாயக விரோத செயலுக்கு அடக்குமுறைக்கு எதிராக அஞ்சாமை என்ற நிலையை எடுக்க வேண்டும் என அதிமுகவின் டி.ஜெயக்குமார் பேசினார்.

    இசைஞானி இளையராஜா அம்பேத்கரை மோடியுடன் ஒப்பிட்டு பேசியது தவறு என்று, தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி  அடுத்த நேமம் கிராமத்தில்,  புரட்சி  பாரதம்  கட்சி சார்பில் சகோதரத்துவ பண்பாட்டு கூடல்  மாநாடு  நடைபெற்றது.

    புரட்சி  பாரதம்  தலைவர்  ஜெகன் மூர்த்தி தலைமையில் புரட்சி பாரதம் கட்சி நிறுவனர் பூவை எம். மூர்த்தியாரின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அதிமுக அமைப்புச் செயலாளர் மற்றும் முன்னாள் சபாநாயகர் டி.ஜெயகுமார், முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின், பி.வி ரமணா, அப்துல் ரஹீம், திருவள்ளூர் முன்னாள் எம்பி பி. வேணுகோபால்,பகுஜன் சமாஜ் கட்சி  தலைவர் ஆம்ஸ்டராங், தமிழக  மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன், மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி உள்பட பலர்  பங்கேற்றனர்.

    இதையும் படிங்க -  இளங்கோவன் விமர்சிப்பதும் கி.வீரமணி கைதட்டுவதும்.. இளையராஜாவை விமர்சிக்கின்ற முறையா? பா.ரஞ்சித் கண்டனம்!

    இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அதிமுக  அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் பேசுகையில், முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் தாழ்த்தப்பட்ட,  ஆதிதிராவிட மக்களுக்கு பல  நன்மைகளை செய்துள்ளார்கள். எங்கள் வீட்டு பிள்ளை திரைப்படத்தில் நடிகர்  நம்பியார் எம்ஜிஆருடைய கன்னத்தில் ஒருமுறை அடிக்கும்போது அவரை எம்ஜிஆர் மாறி மாறி கன்னத்தில் திருப்பி அடிப்பார். அதேபோன்று எதேச்சதிகாரத்திற்கு எதிராக,  ஜனநாயக விரோத செயலுக்கு அடக்குமுறைக்கு எதிராக அஞ்சாமை என்ற நிலையை எடுக்க வேண்டும். எதற்கும் அஞ்சக்கூடாது. என்றார்.

    இதையும் படிங்க -  "இளையராஜா ஒன்றிணைப்பார்" - மதுரையில் பரபரக்கும் பாஜக போஸ்டர்கள்..

    தமிழக மக்கள் முன்னேற்ற கட்சி தலைவர் ஜான்பாண்டியன் பேசுகையில், அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் சொந்தக்காரர் இல்லை. அவரை குறுகிய வட்டத்திற்குள் அடைக்கப் பார்க்கிறார்கள். அம்பேத்கர் உலக அளவிலான தலைவர். அம்பேத்கருக்கு நிகர் அம்பேத்கர்தான். உலக வரலாற்றில் அவருக்கு இணையான தலைவர் யாரும் இல்லை. அவரை மற்றவர்களுடன் இசைஞானி இளையராஜா ஒப்பிட்டு பேசியது தவறு என தெரிவித்தார்.

    பின்னர் பேசிய புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள் சொந்த கிராமங்களில் இருந்து விரட்டி அடிக்கபடுவதாகவும் அவர்களது உரிமைகள் பறிக்கப்படுவது வேதனை தருவதாக உள்ளது என்றும் இதை தடுக்க குரல் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், அரசு அடித்தட்டு மக்களின் இடங்களை பிடுங்கி தனியாருக்கு தாரைவார்க்க கூடாது என வலியுறுத்தினார்.

    செய்தியாளர் - பார்த்தசாரதி.
    Published by:Musthak
    First published:

    Tags: Ilayaraja, Modi

    அடுத்த செய்தி