Home /News /tamil-nadu /

16 வயது சிறுமியிடம் 32 சவரன் நூதன முறையில் மோசடி.. இளைஞர் கைது

16 வயது சிறுமியிடம் 32 சவரன் நூதன முறையில் மோசடி.. இளைஞர் கைது

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

சமூகவலைத்தளம் மூலம் பழகி 16 வயது சிறுமியிடம் ஏமாற்றி நூதனமாக  மோசடி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இன்ஸ்டாகிராமில் சிறுமியிடம் பழகி பணம், நகை மோசடி செய்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

    திருவள்ளூர் மாவட்டம் விஷ்ணு வாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி தனது வீட்டில் இருந்த ஒரு லட்ச ரூபாய் மற்றும் பணத்தை இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய நபரிடம் கொடுத்து ஏமாந்துள்ளார். இந்த சம்பவம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவர இதுகுறித்து வெங்கல் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். புகாரின் பேரில் இளைஞரை கைது செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆன்லைனில் படிப்பதற்காக சிறுமிக்கு அவரது  பெற்றோர் ஸ்மார்ட்போன் வாங்கிக்கொடுத்துள்ளனர். சிறுமி சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்துள்ளார். மணவாள நகர் பகுதியைச் சேர்ந்த ரேவந்த் என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமியுடன் பேசி பழகி வந்துள்ளார். இந்நிலையில்தான் சிறுமியிடம் பேசி அந்த இளைஞர் நூதன முறையில் சிறுக சிறுக ஒரு லட்சம் ரூபாய் வரையில் பணம் பறித்துள்ளார். மேலும் சிறுமியின் வீட்டில் இருந்து 32 சவரன் தங்க நகைகளையும் மோசடி செய்து வாங்கியுள்ளார்.

    Also Read: சாராய குடோனை காட்டிக்கொடுத்த விவகாரம்.. வாலிபர் தலை துண்டித்து கொலை - திடுக்கிடும் தகவல்

    இதுகுறித்து சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிந்த பின்னர் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.  சமூக வலைத்தளம் மூலம் பழகி 16 வயது சிறுமியிடம் ஏமாற்றி நூதனமாக  மோசடி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞரிடம் போலீசார் நடத்தி வரும்   விசாரணைக்கு பின்னரே சிறுமியிடம் எப்படி நகை மற்றும் பணத்தை ஏமாற்றினார் என்பது தெரியவரும்.

    செய்தியாளர்: பார்த்தசாரதி (திருவள்ளூர்)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Cheating case, Crime | குற்றச் செய்திகள், Instagram

    அடுத்த செய்தி