Home /News /tamil-nadu /

யோகாசனத்தில் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற அண்ணன், தங்கை

யோகாசனத்தில் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற அண்ணன், தங்கை

யோகாசனத்தில் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

யோகாசனத்தில் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

யோகாசனத்தில் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    திருத்தணியில் டாக்டர் இராதாகிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி ஆகிய இரண்டு அரசு பள்ளிகளில் பயின்று வரும் ஒன்பதாம் வகுப்பு மாணவன்  மோஹித் (வயது(14). இவரது தங்கை அரசுப்பள்ளி மாணவி லக்க்ஷயா வயது(13).  இருவரும் தொடர்ந்து 5 ஆண்டுகளாக கடுமையான யோகாசனப் பயிற்சி எடுத்து யோகாசனத்தில் உலக சாதனை படைக்க கடுமையான பயிற்சியினை இவர்களுக்கு யோகா மாஸ்டர் டி. பிரகாஷ் குமார் வழங்கியுள்ளார்.

    பயிற்சி மேற்கொண்ட 2 அரசு பள்ளி மாணவ, மாணவிகளும் நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற இந்த அமைப்பின் டைரக்டர் சுதாகர் மற்றும் போட்டியின் நடுவர்கள் பசுபதி செல்வம் ஆகியோர் முன்னிலையில் திருத்தணி மலைக்கோயில் மலையடிவாரத்திலிருந்து இந்த போட்டி நிகழ்ச்சி தொடங்கியது.

    இந்நிகழ்ச்சியில் மாணவன் மோஹித் சக்கராசனம், பத்மாசனம், நின்ற பாத ஆசனம் ஆகிய ஆறு ஆசனங்களை மலைக்கோயில் அடிவாரத்தில் இருந்து மலைமீது வரை 42 நிமிடங்கள் 26 நொடிகளில் செய்து சாதனை படைத்தார். மேலும் மற்றொரு அரசுப் பள்ளி மாணவி லக்க்ஷயா மலைக்கோயில் ராஜகோபுர பகுதியிலிருந்து படிக்கட்டுகள் வழியாக சக்கராசனம் போன்ற ஆசனத்தை செய்தவாறு படிக்கட்டுகளில் இரண்டு கை இரண்டு கால்கள் படிக்கட்டுகளில் ஊன்றியவாறு ஏறி 108 படிக்கட்டுகளை ஏறி சாதனை படைத்தார்.

    இந்த மாணவி 4 நிமிடம் 5 நொடிகள் இந்த சாதனை செய்தார். மற்றும் ஐந்து நிமிடம் இவர் இந்த சாதனைக்கு எடுத்துக் கொண்டதாக நடுவர்கள் தெரிவித்தனர். மேலும் வெற்றி பெற்ற இரண்டு அரசு பள்ளி மாணவ & மாணவிகளுக்கு நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனர். இவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை தி.மு.க திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.பூபதி வழங்கினார்.

    ALSO READ | பேருந்தில் சென்ற முதல்வர் டிக்கெட் எடுத்தாரா? பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி…
    இந்நிகழ்ச்சியில் நகர கழக பொறுப்பாளர் வி.வினோத்குமார் நகரமன்ற உறுப்பினர் நாகராஜ், மாணவனின் பெற்றோர்கள் தணிகைவேல்- ராஜேஸ்வரி மற்றும் அவர்களது உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.


    திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணியில் அரசு பள்ளியில் படித்த & மாணவர்கள் இதுபோல் யோகாசனத்தில் உலக சாதனை யாரும் இதுவரை இங்கு படைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு திருத்தணியில் பொதுமக்கள் இனிப்பு வழங்கி அவர்களது உறவினர்கள் இந்த சந்தோஷத்தை கொண்டாடினார்கள்.


    செய்தியாளர் : சசி குமார்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Thiruvallur, Yoga

    அடுத்த செய்தி