Home /News /tamil-nadu /

சிக்கனில் சிகப்பு நிறம் வந்தது எப்படி? ஷவர்மா, சிக்கன் கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை

சிக்கனில் சிகப்பு நிறம் வந்தது எப்படி? ஷவர்மா, சிக்கன் கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை


சிக்கன்ல சிகப்பு நிறம் வந்தது எப்படி?

சிக்கன்ல சிகப்பு நிறம் வந்தது எப்படி?

Chennai District | ஆவடி, அம்பத்தூர், பட்டாபிராம், அம்பத்தூர் தொழிற்பேட்டை OMR புட் ஸ்ட்ரீட் திருமுல்லைவாயல், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மாமிச உணவகங்களில் திடீர் ஆய்வு  மேற்கொண்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி டாக்டர் ஜெகதீஸ் சந்திரபோஸ் தலைமையில் அதிகாரிகள் ஆவடி அம்பத்தூர் திருமுல்லைவாயல் உள்ளிட்ட பகுதியில் ஷவர்மா சிக்கன் கடைகளில்  திடீர் ஆய்வு நடத்தினர். அதில் 36 கிலோ கோழிக்கறி அளிக்கப்பட்டு 10க்கும் மேற்பட்ட கடைகளுக்கு  20000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டது.

    கேரளாவில் ஷாவர்மா சாப்பிட்டதில் மாணவி ஒருவர் உயிரிழந்தார். இது சவர்மா குறித்த அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு முழுக்க சவர்மா கடைகளில்  உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஆவடி, அம்பத்தூர், பட்டாபிராம், அம்பத்தூர் தொழிற்பேட்டை OMR புட் ஸ்ட்ரீட் திருமுல்லைவாயல், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மாமிச உணவகங்களில் திடீர் ஆய்வு  மேற்கொண்டனர்.



    அதில் சிக்கன் 65 , சிக்கன் ஷவர்மா , கிரில் சிக்கன் போன்றவற்றில் அதிக வேதி பொருளால் நிறமேற்றப்பட்ட செயற்கை நிறமூட்டப்பட்ட சிக்கன் சவர்மா, சிக்கன் என சுமார்  36 கிலோ கோழிகறி கடந்த 3 நாட்களாக நடந்த சோதனையில் கண்டு அளிக்கப்பட்டது.



    மேலும்180°டிகிரி , 220° வேக வைக்காத சிக்கன் உரிமம் இல்லாத நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட குப்பூஸ் எனப்படும் அரபி பண் ஆகியவை பறிமுதல் செய்தனர்.  மேலும் நான் புட் கிரேட் பிளாஸ்டிக் பயன்படுத்திய 10 ஹோட்டலுக்கு தலா 2000 வீதம் 20000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.



    மேலும் தொடர்ந்து இந்த ஆய்வு என்பது நடைபெறும் என திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி டாக்டர் ஜெகதீஸ் சந்திரபோஸ்  தெரிவித்துள்ளார்.

    செய்தியாளர் : கன்னியப்பன்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Chicken, Thiruvallur

    அடுத்த செய்தி