Home /News /tamil-nadu /

மணலி புதுநகர், விச்சூர் சிட்கோ தொழில் பேட்டை, குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்

மணலி புதுநகர், விச்சூர் சிட்கோ தொழில் பேட்டை, குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்

மணலியில் வெள்ள பாதிப்பு

மணலியில் வெள்ள பாதிப்பு

பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து 40 ஆயிரம் கன அடி நீர் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.

    தொடர் கனமழை காரணமாக  மணலி புதுநகர், விச்சூர்  சிட்கோ தொழில் பேட்டை  மற்றும் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்ததால், பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். பள்ளிகளை சூழ்ந்த தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருவள்ளூர் மாவட்டம் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேற்ற பட்டு வரும் சுமார் 40 ஆயிரம் கன அடி நீரானது கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டு, எண்ணூர் கழிமுகத்தில் எண்ணூர்  உப்பங்கழியில் கலக்கிறது.

    இந்நிலையில், தொடர்ந்து கூடுதலாக உபரிநீர் வெளியேற்றப்பட்டதால் மணலி புதுநகர், விச்சூர் எழில்நகர்,  சுப்பாரெட்டிபாளையம் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள  அத்திப்பட்டு புதுநகர் பகுதிகளில் குடியிருப்புகளில் சூழ்ந்துள்ள மழை நீரால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    பழைய நாபாளையம் பகுதியில் பள்ளிதிறக்கப்பட்டும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அரசு உயர்நிலைபள்ளியில் மழை நீர் சூழ்ந்து வெளியேறாத நிலையில் மோட்டார் மூலம் தொடர்ந்து நீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    Must Read : கெடிலம் அற்றில் அடித்துச்செல்லப்பட்ட கார்.. இரண்டாவது நாளாக தேடுதல் பணி தீவிரம்

    கனமழை காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் பாதிப்புக்குள்ளாகும் இப்பகுதிகளில் மழைநீரை நிரந்தரமாக வெளியேற்றி வடிகால் வசதி அமைத்து நிரந்தர தீர்வு வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    செய்தியாளர் - பார்த்தசாரதி, திருவள்ளூர்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Flood, Manali

    அடுத்த செய்தி