Home /News /tamil-nadu /

Electric Bike catches fire | திருவள்ளூர் அருகே எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்து தீ விபத்து... மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்

Electric Bike catches fire | திருவள்ளூர் அருகே எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்து தீ விபத்து... மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்

எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்து தீ விபத்து

எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்து தீ விபத்து

E-Bike Fire : திருவள்ளூர் அருகே இ-பைக் தீப்பிடித்ததால் வீடு, பெட்ரோல் பைக் மற்றும் வீட்டில் பயன்படுத்திய குளிர்சாதனப்பெட்டி உள்ளிட்ட சுமார் 3 லட்சத்துக்கும் மேல்பட்ட பொருட்கள் எரிந்து சேதமாயின.

    திருவள்ளூர் அருகே விவசாயி வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த பேட்டரி பைக் தீப்பிடித்து எரிந்து வீட்டிலிருந்த குளிர்சாதன பெட்டி மோட்டார் பம்புகள் என சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாயின.  இ-பைக் பைக் பேட்டரி வெடித்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் வாகன ஓட்டிகள் இடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் வட்டம் நரசிங்கபுரம் கிராமத்தில் விவசாயி தேவராஜன் (வயது 45)  என்பவர் கடந்த ஏழு மாதம் முன்பு வாங்கிய இ ப்ளூட்டோ செவன் ஜி மாடல் எலக்ட்ரிக் பேட்டரி மாடல் இருசக்கர வாகனத்தை பயன்படுத்தி வருகிறார். வழக்கம்போல் தனது பைக்கை வீட்டின் முன்பு நிறுத்தி சார்ஜ் செய்து விட்டு இணைப்பை துண்டித்த அவர் குடும்பத்தினருடன் தூங்கினார்.

    இந்நிலையில், அவரின் மனைவி தேன்மொழி அதிகாலை எழுந்த போது, எலக்ட்ரிகல் இ-பைக்  திடீரென தீப்பிடித்து புகை வந்ததை பார்த்து கூச்சலிட்டார். இது குறித்து பெரும்பாக்கத்தில் உள்ள தீயணைப்பு துறையினருக்கு தகவல் தந்ததை அடுத்து, அங்கு விரைந்த  தீயணைப்பு துறையினர்   வீட்டில் உள்ள அனைவரையும் பத்திரமாக மீட்டனர் மற்றும் தீயை அணைத்தனர்.

    இதனால் அவரது வீடு, அவரது வீட்டில் இருந்த பெட்ரோல் பைக் மற்றும் வீட்டில் பயன்படுத்திய குளிர்சாதனப்பெட்டி, விவசாயத்திற்கு பயன்படுத்திய இரண்டு மோட்டார்கள் என சுமார் 3 லட்சத்துக்கும் மேல் சேதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மப்பேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இ-பைக்


    Must Read : பிளாக்கில் விற்கப்படும் மது பாட்டில்கள் போலியா.. கண்டுபிடிக்க டாஸ்மாக் அதிரடி திட்டம்

    சில தினங்களுக்கு முன்னர், வேலூரில் எலக்ட்ரிக் பைக்கால் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தந்தை-மகள் உயிரிழந்த நிலையில், மேலும் ஒரு எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்து தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளான சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    செய்தியாளர் - பார்த்தசாரதி, திருவள்ளூர்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Bike, Fire accident, Thiruvallur

    அடுத்த செய்தி