திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இதில்
திமுக சார்பில் 12 பேரும்
அதிமுக சார்பில் ரெண்டு பேரும் காங்கிரஸில் ஒருவரும் சுயேட்சையாக ஆறு பேரும் வெற்றி பெற்றனர். கடந்த 2ஆம் தேதி புதிய கவுன்சிலர் பதவி ஏற்ற ஏற்றுக்கொண்டனர். இதனையடுத்து இன்று தலைவர் மற்றும் துணைத் தலைவரான மறைமுக தேர்தல் நடைபெற்றது.
இதில் திமுக சார்பில் காஞ்னா சுதாகர் என்பவரை திமுக தலைமை வேட்பாளராக அறிவித்தது. இதற்கிடையே பூந்தமல்லி நகர திமுக செயலாளர் ரவிக்குமார் மனைவி மாலதி ரவிக்குமார் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட வேட்புமனு செய்தார். அதிமுக சார்பில் வெற்றி பெற்ற கீதா மேகநாதன் வேட்புமனுத் தலைவருக்காக வேட்புமனு தாக்கல் செய்தார்.
பூந்தமல்லி நகராட்சி தேர்தலில் இதனால் மும்முனைப் போட்டி நிலவியது. இதை தொடர்ந்து கவுன்சிலர்கள் வாக்குப் பதிவு செய்தனர். 2 கவுன்சிலர்கள் தங்களது வாக்கை பதிவு செய்தனர். இந்நிலையில், தேர்தல் அதிகாரி நாராயணன் தேர்தலை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். தேர்தல் நடத்தும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இதனால், வாக்களிக்க வந்த கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலர் அதற்குள்ளேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தி வைக்கப்பட்டனர். தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது குறித்து தகவலறிந்த நகர செயலாளர் ரவிக்குமாரின் ஆதரவாளர்கள் அவரது தலைமையில் பூந்தமல்லி நகராட்சி அலுவலகம் எதிரே மறியலில் ஈடுபட்டனர்.
Must Read : திமுக உறுப்பினர்கள் 'ராஜினாமா' செய்ய வேண்டும் - திருமாவளவன் ட்வீட்
இதையடுத்து, பாதுகாப்புக்காக வந்திருந்த போலீசார் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மறைமுக தேர்தல் நடைபெறும் நகராட்சி அலுவலக வளாகத்திற்குள் பத்திரிகையாளர்களை அனுமதிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். பூந்தமல்லி நகராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் மறுதேதி குறிப்பிடாமல் நிறுத்தி வைக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர் : சோமசுந்தரம் இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.