முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பக்கத்துவீட்டு காரக்குழம்பால் வந்த பிரச்னை... தம்பியை கோடாரியால் வெட்டி கொன்ற அண்ணன்

பக்கத்துவீட்டு காரக்குழம்பால் வந்த பிரச்னை... தம்பியை கோடாரியால் வெட்டி கொன்ற அண்ணன்

மாதிரி படம்

மாதிரி படம்

கும்முடிப்பூண்டி அருகே பக்கத்து வீட்டில் காரகுழம்பு வாங்கிய விவகாரம் அண்ணன் - தம்பி இடையே மோதலாக உருவாகி கொலையில் முடிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கும்மிடிப்பூண்டி அருகே கவரப்பேட்டை அடுத்த கெட்டனமல்லி கிராமத்தில் பக்கத்து வீட்டில் காரக்குழம்பு வாங்கி சாப்பிட்டதில் அண்ணன் தம்பிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டதில் மதுபோதையில் இருந்த  அண்ணன் தம்பியை கோடாரியால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் சென்ட்ரிங் கூலித் தொழிலாளி ரமேஷ் மற்றும் அவரது அண்ணன் சுப்பிரமணி கூட்டுக்குடும்பமாக வசித்து வந்துள்னர். இந்நிலையில் மதுபோதையில் இருந்த அண்ணன் சுப்பிரமணி பக்கத்து வீட்டில் காரக்குழம்பு வாங்கி சாப்பிட்டுள்ளார்.  இதனை கறிக்கடை நடத்திவரும் அவரது தம்பி ரமேஷ், பக்கத்து வீட்டில் காரக்குழம்பு வாங்கி சாப்பிடுகிறாயா வெட்கமா இல்லையா என்று கேட்கவே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

Also Read : கற்பை நிரூபிக்க மகளை தீயிட்டு கொளுத்த சொன்ன கணவன்... 13 வயது சிறுமி பரிதாப பலி

அண்ணன் - தம்பிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டு போதையில் ஆத்திரமடைந்த சுப்பிரமணி தனது தம்பி ரமேஷ் வீட்டில் இருந்த கோடாரியால் எடுத்து வெட்டி உள்ளார். அதை தொடர்ந்து அங்கேயே மதுபோதையில் படுத்து தூங்கிஉ உள்ளார். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய ரமேசை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த நிலையில் கவரப்பேட்டை காவல் நிலைய போலீசார் சுப்ரமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

First published:

Tags: Crime News, Thiruvallur