ஓடும் ரயிலில் ஆபத்தான நிலையில் பயணம் மேற்கொண்ட மாணவி, மாணவனை நேரில் அழைத்து திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் ஐபிஎஸ் அறிவுரை வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குப்பட்ட கவரப்பேட்டை ரயில்நிலையத்தில் பள்ளி மாணவன் மற்றும் மாணவி ஓடும் ரயிலில் அபாயகரமாக எறியும், கால்களை நடைமேடையில் தேய்த்தபடியும் பயணம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. கவரப்பேட்டையில் ரயில் நிலையத்தில் இருந்து மின்சார ரயில் புறப்பட்டு மெதுவாக நகரவும், அந்த மாணவி ரயில் படிக்கட்டில் உள்ள கம்பியை பிடித்தபடி சிறிது தூரம் நடைமேடையில் ஓடி வந்து பின்னர் துள்ளிக் குதித்து ரயிலில் ஏறுகின்றாள்.
Also Read: ஓடும் ரெயிலில் விபரீத சாகசம்.. பள்ளி மாணவியை நேரில் அழைத்து திருவள்ளூர் எஸ்.பி அறிவுரை
பின்னர் அதே வேகத்தில் ரயில் படிக்கட்டில் தொங்கியபடி தனது ஒரு காலை நடைமேடையில் உரசிய படி சக பள்ளி மாணவருடன் சேர்ந்து பயணம் செய்யும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது. சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலானதால் இதுபற்றி கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர்.
Also Read: மதம் மாறியவருக்கு கலப்பு திருமண சான்று வழங்க உத்தரவிட முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்
இதுசம்மந்தமாக கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த சம்மந்தப்பட்ட அந்த மாணவர் மற்றும் மாணவியை அவர்களது பெற்றோர்களுடன் காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் அவர்கள் நேரில் அழைத்து அவர்களது ஆபத்தான பயணம் பற்றி அறிவுரை வழங்கினார். மேலும், அவர்களின் எதிர்கால கனவு குறித்து கேட்கும் போது அந்த மாணவர் தான் ஒரு DSP ஆகப்போவதாகவும், அந்த மாணவி தான் ஒரு IPS அதிகாரியாகபோவதாகவும் தெரிவித்தனர். அந்த மாணவர்கள் வருங்காலத்தில் சிறப்பாக படிக்க ஆலோசனைகள் வழங்கி அனுப்பி வைக்கப்பட்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tamil News, Tamilnadu, Thiruvallur, Train, Viral Video