Home /News /tamil-nadu /

திருவள்ளூரில் முதல்முறையாக அரசு சார்பில் நடைபெறும் புத்தகத் திருவிழா

திருவள்ளூரில் முதல்முறையாக அரசு சார்பில் நடைபெறும் புத்தகத் திருவிழா

புத்தகத் திருவிழா

புத்தகத் திருவிழா

Tiruvallur Book Fair | திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் முதல் புத்தக கண்காட்சி நாளை முதல் 11-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

  • News18
  • Last Updated :
    திருவள்ளூரில் முதல்முறையாக அரசு சார்பில் நடைபெறும் புத்தகத் திருவிழாவை பால்வளத்துறை அமைச்சர் சாமு நாசர் இன்று மாலை தொடங்கி வைக்கிறார்.

    திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் முதல் புத்தக கண்காட்சி நாளை முதல் 11-ந்தேதி வரை நடைபெற உள்ளது. புத்தக கண்காட்சியின் போது நடைபெறும் கருத்தரங்கில் தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவர் திண்டுக்கல் ஐ லியோனி பேச்சாளர் நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்று புத்தக வாசிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளனர்.

    Also read... திருவள்ளூர் ஆட்சியரகம் எதிரே 5 ஆண்டுகளுக்கும் மேலாக பூட்டியிருக்கும் பொது நூலகம் - பொதுமக்கள் வேதனை

    தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில் 100- அரங்குகளில் முன்னணி புத்தகப் பதிப்பாளர்களின் புத்தகங்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட உள்ளன. இந்த புத்தக கண்காட்சி தொடக்க விழா இன்று மாலை 4 மணி அளவில் நடக்கிறது.

    -செய்தியாளர்: பார்த்தசாரதி
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Book Fair, Thiruvallur

    அடுத்த செய்தி