திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அத்திமஞ்சேரிபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் மணி வயது(38). இவர் காஷ்மீரில் துணை ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் காஷ்மீர் பகுதியில் துணை ராணுவ வீரர்களுடன் பேருந்தில் காஷ்மீரில் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு குழுவாக இருசக்கர வாகனங்களில் 11பேர் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்றனர்.
அப்போது ஸ்ரீநகரில் இருந்து இரு சக்கர வாகனங்களில் குழுவாக சென்றபோது எதிரே வந்த லாரி மோதியதில் . திருத்தணியை சேர்ந்த துணை ராணுவ வீரர் மணி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார். இறந்துபோன துணை ராணுவ வீரர் மணிக்கு பாரதி என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
Also Read : 10 வயது மகனுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை - அம்பத்தூர் அடுக்குமாடி குடியிருப்பில் அதிர்ச்சி சம்பவம்
மேலும் இவர் குடும்பத்தில் இவர் நான்காவது மகன் ஆவார். தற்போது துணை ராணுவ வீரர் இறந்த மணி செய்தியின் கேட்டு கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இவரது குடும்பத்திற்கு அந்த கிராமத்தைச் சேர்ந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.