திருவள்ளூரில் தொடர் மின்வெட்டு; விளை நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை: விவசாயிகள் வேதனை!

தொடர் மின்வெட்டு - விவசாயிகள் அவதி

மின்வெட்டு குறித்து புகார் தெரிவிக்க செல்போனில் தொடர்பு கொண்டாலும் அவசர எண்ணில் தொடர்பு கொண்டாலும் ஒருவரும் போனை எடுப்பதில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

 • Share this:
  திருவள்ளூரில் ஊராட்சி பகுதிகளில் இரவு, பகலாக ஏற்படும் தொடர் மின்வெட்டு காரணமாக வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச கூட முடியவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளளனர். மேலும், மின்வெட்டால், முதியோர் மற்றும் நோய்த்தொற்று பாதித்து வீடுகளில்  சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளும் கடும் அவதியடைந்துள்ளனர்.

  திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் வெங்கத்தூர், நுங்கம்பாக்கம், போளிவாக்கம், கீழ்நல்லத்தூர், மேல்நல்லத்தூர், சேலை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொடர்ந்து அதிகரித்துவரும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் குறிப்பாக வயதானவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

  பெரும் தொற்று பரவலால் பள்ளி கல்லூரிகள் செயல்படாத நிலையில் வீடுகளிலேயே ஆன்லைன் வகுப்பு மூலம் படிக்கும் சூழலில் பகல் நேரத்திலும் தொடரும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால் மாணவர்களும் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இரவு நேர மின்வெட்டால் தூக்கத்தை தொலைத்து தவிக்கும் பொதுமக்கள் பகலில் தொடர் மின்வெட்டால் மேலும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  விவசாயிகள் தங்களது விளை நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டு அவதியுற்று வருகின்றனர். மணவாளநகர் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து மின் வினியோகம் முறையாக இல்லாததால் கடந்த இரண்டு வாரங்களாக திருவள்ளூரை சுற்றியுள்ள கிராம மக்கள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

  திருவள்ளூரின் சேலை, மேல்நல்லாத்தூர் போளிவாக்கம் மணவாளநகர் சுற்றுப் பகுதியில், சில நாட்களாக அடிக்கடி மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது. தொடர் மின்வெட்டால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மின்வெட்டு குறித்து புகார் தெரிவிக்க செல்போனில் தொடர்பு கொண்டாலும் அவசர எண்ணில் தொடர்பு கொண்டாலும் ஒருவரும் போனை எடுப்பதில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

  இதனால், 'ஆன்லைன்' மூலம் பாடம் கற்கும் மாணவர்களும், தற்போது, நேரடியாக பள்ளிக்கு சென்று பாடம் படிக்கும், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களும் அவதிப்பட்டு வருகின்றனர் தொடர் மின்வெட்டால் விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் வயதானவர்களின் நிலை கருதியும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, சீரான மின் வினியோகத்தை வழங்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  செய்தியாளர் - பார்த்தசாரதி  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: