திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த வன்னி பாக்கம் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட ஆரம்பப்பள்ளி யின் கட்டிடம் இடிக்கப்பட்டு ஏழு மாதம் ஆகிறது. இன்றுவரை அஸ்திவாரம் கூட தோன்டவில்லை. இதற்கிடையில் பள்ளி குழந்தைகள் படிப்பதற்காக அருகாமையில் உள்ள ஒரு சிறு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து அங்கு பள்ளி மாற்றப்பட்டுள்ளது. ஆனால் அந்த கட்டிடத்தில் இடவசதி போதுமானதாக இல்லாததால் பிள்ளைகள் மிகவும் நெருக்கமாக அமர்ந்து கல்வி கற்கின்றனர்.
மேலும் 4 முதல் 5 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்த கட்டிடத்தின் மேற்கூரையில் பிளாஸ்டிக் பர்தாவை மேலே விரித்து அதன் கீழ் பிள்ளைகளை அமரவைத்து கல்வி பயிற்றுவிக்க படுகிறது. இதனால் வெயிலின் தாக்கம் அதிகமுள்ள இந்த சூழலில் இந்த பிளாஸ்டிக் பர்தாவின் கீழே அமர்ந்து படிப்பது தங்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளதாகவும் இதன்மூலம் வரும் வெப்ப தாக்கத்தை தங்களால் தாங்க முடியவில்லை என்றும் பள்ளி குழந்தைகள் நம்மிடம் கூறுகின்றனர். கட்டிடத்தின் படிக்கட்டுகளிலும் மாணவர்கள் அமர்ந்து நெருக்கமாக படிப்பது நமக்கு வேதனையை அளிக்கிறது.
மேலும் இது குறித்து தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது கட்டிடம் இடிக்கப்பட்டது .ஆனால் அஸ்திவாரம் தோண்டவில்லை, இனி எப்பொழுது தோண்டுவார்கள் என்பது எங்களுக்கு தெரியவில்லை . இப்படி நெருக்கமாக பிள்ளைகளை அமர வைத்து பாடம் நடத்துவதால் எங்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. என்றும் பிள்ளைகளும் சரியான முறையில் கல்வி கற்பிக்க முடியவில்லை என்றும் கூறினார்.
Also Read : தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை இடையே உயர்மட்ட சாலை: அமைச்சர் ஏ.வ.வேலு அறிவிப்பு
இதற்கிடையே தற்காலிக கல்வி பயில்வதற்காக இங்கு உள்ள செங்கல் சூளையில் வேலை செய்யும் கூலி தொழிலாளர்களின் பிள்ளைகள் அருகிலுள்ள வேப்ப மரத்தடியில் கல்வி கற்கின்றனர். இது குறித்து கிராம தலைவரிடம் கேட்டபொழுது, இந்த கட்டிடத்திற்கு வாடகை எங்கள் சொந்த செலவில் இருந்து தான் வாடகை நான்காயிரம் ரூபாயை தருகிறோம். அரசு பள்ளி மாணவர்கள் கல்வி பழாவதை பார்க்கும்போது வேதனையாக உள்ளது .
வகுப்பறை இல்லாததால் மாணவர்கள் படிக்க முடியாமல் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது. புதிய பள்ளி கட்டுமான பணிகளை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் : பார்த்தசாரதி, திருவள்ளூர் இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.