திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயிலில் நரிக்குறவர் குடியிருப்பில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் முக
ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது நரிக்குறவர்களுக்கு
ரேஷன்கார்டு, முதியோர் உதவித்தொகை, முதல்வரின் மருத்துவ காப்பீடு அட்டை உள்ளிட்டவைகளை வழங்கினார். மேலும், திருமுல்லைவாயில் நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவிகளையும் முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின் நரிக்குறவ இன மக்களுடன் சேர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் எடுத்து கொண்டார். அதை தொடர்ந்து நரிக்குறவ மாணவி திவ்யாவின் வீட்டிற்கு சென்ற முதல்வர் காலை உணவு மற்றும் தேநீர் அருந்தினார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், இங்கு வசிக்கும் சகோதரி ஒருவரது வீட்டிற்கு சென்று
கறி சோறு சாப்பிட்டேன். கொஞ்சம் காரமாக இருந்தது. மாமல்லபுரம் கோவிலில் நரிக்குறவர் பெண்னை உணவு சாப்பிட அனுமதிக்காதது கண்டு கோவப்பட்டேன் . ஒரு பெண்ணை இப்படி செய்தது நியாயமா ? அவரை கோவிலில் அமர வைத்து சாப்பிட வைக்க அமைச்சர் சேகர்பாபுவிடம் உத்தரவிட்டேன். அவர் கோவிலில் சாப்பிடுவதை பார்த்த பின் தான் நிம்மதி வந்தது. அந்தப் பகுதிக்கே நான் நேரில் சென்று அவர்களது கோரிக்கைகளையும் கேட்டறிந்தேன். அதனை படிப்படியாக நிறைவேற்றிட உத்தரவிட்டேன் என்றார்.
Also Read :
இந்தி திணிப்புக்கு எதிராக ஏ.ஆர். ரகுமான் பேசியது தவறு இல்லை - கே.பி. முனுசாமி
நரிக்குறவர் இனத்தை சேர்ந்த பிரியா, திவ்யா, தர்ஷினி ஆகிய மாணவிகள் தங்கள் கல்விக்கு உதவி வேண்டிய பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த வீடியோவை பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவிகளை நேரில் சந்தித்து தனது பாராட்டை தெரிவித்தார். மேலும் தங்களது குடியிருப்பு பகுதியில் எந்த அடிப்படை வசதியும் இல்லை. நீங்கள் உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்று மாணவிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்து இருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.