Home /News /tamil-nadu /

திமுக எம்எல்ஏ-விடம் ரூ.25 லட்சம் பணம் பறிக்க முயற்சி - கில்லாடி தம்பதியை கைது செய்த போலீஸ்

திமுக எம்எல்ஏ-விடம் ரூ.25 லட்சம் பணம் பறிக்க முயற்சி - கில்லாடி தம்பதியை கைது செய்த போலீஸ்

திமுக எம்எல்ஏவை ஏமாற்ற முயன்ற தம்பதி கைது

திமுக எம்எல்ஏவை ஏமாற்ற முயன்ற தம்பதி கைது

திருத்தணி எம்எல்ஏ-வை ஏமாற்றி பணம் பறிக்க முயன்ற வழக்கில் தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

    திருத்தணி ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினரை நூதன முறையில் 25 லட்சம் கேட்டு ஏமாற்ற பார்த்த கணவன் மனைவி இருவரையும் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் திருத்தணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருத்தணி  தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சந்திரனின் செல்போனுக்கு கடந்த  ஜனவரி 25ஆம் தேதி அழைப்பு வந்துள்ளது. மறுமுனையில் பேசிய நபர் தான் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து பேசுகிறேன். நான் உள்துறை டிஎஸ்பி ஆக பணிபுரிகிறேன். உங்கள் சட்டமன்ற தொகுதி சம்பந்தமாக ஒரு புகார் வந்துள்ளது. இந்தப் புகாரை என்னால் சரிசெய்ய முடியும் இதற்கு கொஞ்சம் பணம் செலவாகும் நீங்கள் ரூபாய் 25 லட்சம் பணத்தை தயார் செய்யுங்கள். அந்தப் பணத்தை சொல்லும் இடத்தில் கொண்டுவந்து கொடுக்கும்படியும் . பணத்தை எங்கு வந்து கொடுப்பது என்பதை பிறகு தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

    Also Read:  பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம் மீது வழக்குப்பதிவு

    அதற்கு சந்திரன்  திருத்தணி தொகுதி சார்ந்த பிரச்னை என்னவென்று கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர், இது பெரிய பிரச்னை தேவையில்லாமல் அதிகம் கேள்வி கேட்டு நீங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள். அந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்தால் ஆபத்தாகிவிடும். அதனை நான் சரி செய்து கொடுக்கிறேன். என்னை நம்புங்கள். இதைப்பற்றி வேறு யாரிடமும் தெரிவிக்க கூடாது இது மிகவும் ரகசியமான விஷயம் எனவே இதைப்பற்றி வேறு யாராவது விசாரித்தால் வேறு யார் நினைத்தாலும் உங்களை காப்பாற்ற முடியாது எனக் கூறி போனை துண்டித்துள்ளார்.

    சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் மீண்டும் அந்த எண்ணை  தொடர்பு கொண்டுள்ளார். பணத்தை தயார் செய்து விட்டீர்களா என்று அந்த நபர் கேட்க அதற்கு பணத்தை நாளை தருகிறேன் என்று எம்எல்ஏ தெரிவித்துள்ளார். அதற்கு அந்த நபர் இதுபோன்ற பிரச்னை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினருக்கும் ஏற்பட்டிருக்கிறது. அவருக்கும் நான்தான் அவரது சட்டமன்ற தொகுதி பிரச்னையை தீர்த்து வைக்க போகிறேன் அவர் 25 லட்சம் தரப்போகிறார். நீங்களும் இதுபோல் பிரச்னையை  சரி செய்து கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.

    Also Read: மகளிடம் அத்துமீறிய கணவன்.. சுத்தியால் அடித்துக்கொன்ற மனைவி - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

    நான் மீண்டும் ஜனவரி 27ஆம் தேதி தங்களை தொடர்பு கொள்கிறேன். பணத்தை எங்கு வந்து தர வேண்டுமெனவும் தெரிவிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் அந்த நபர். திருத்தணி சட்டமன்ற உறுப்பினருக்கு சந்தேகம் ஏற்பட்டு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினருக்கு அலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது ஒரு நபர் என்னை தொடர்பு கொண்டார் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி பிரச்னையை சரி செய்து தருவதாகவும் 25 லட்சம் கேட்டதாகவும் கூறினார். அந்த நபரிடம் நான் என் தொகுதி பிரச்சினை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று தொலைபேசி தொடர்பை நான் துண்டித்து விட்டேன் என்று விளாத்திகுளம் எம்எல்ஏ கூறியுள்ளார்.

    மீண்டும் ஜனவரி 27ஆம் தேதி திருத்தணி சட்டமன்ற உறுப்பினரை தொடர்புகொண்டு அந்த நபர் நான் திருத்தணி அருகே உள்ள சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை  உள்ள ஜிஆர்டி சொகுசு ஓட்டல் அருகில்  கருப்பு கலர் காரில் வருவதாகவும் பணத்தைக் கொண்டு வந்து தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
    உடனடியாக இந்த சம்பவம் குறித்து முழு விவரத்தையும்  திருத்தணி காவல் நிலையத்தில் புகாராக கொடுத்தார்.

    Also Read: பாஜகவின் பகீர முயற்சிக்கு அதிமுக பலியாகியுள்ளது - இரா.முத்தரசன்

    இதனடிப்படையில் திருத்தணி காவல் நிலைய ஆய்வாளர் ஏழுமலை இந்த புகாரை பெற்று வழக்குபதிவு செய்தார். மேற்படி நபர் தெரிவித்த ஜிஆர்டி ஹோட்டல் அருகில் திருத்தணி காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் மறைந்திருந்தனர். திருத்தணி ஆய்வாளர் கூறியபடி எம்எல்ஏ அவர்களின் உதவியாளர் சதீஷ் அவர்களிடம் ஒரு பையில் பணத்தினை மேலே அடுக்கி வைத்து கீழே வெள்ளைக் காகிதங்களை ஆயுதங்களை பண கட்டுகளாக மாற்றி வழங்க ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

    இந்த பணத்தினை பெறுவதற்காக ஜிஆர்டி ஹோட்டல் அருகில் கருப்பு கலர் காரில் அந்த நபர் வந்துள்ளார். காரில் சென்னை அம்பத்தூர் பகுதியைச் விஜயகுமார் வயது(43) இவரது மனைவி யசோதா வயது(43) ஆகியோர் இருந்துள்ளனர். பணத்தினை எம்எல்ஏ உதவியாளர் சதீஷ் காரின் அருகில் சென்று விஜயகுமார் மனைவி யசோதையிடம் கொடுக்கும் பொழுது  மறைந்திருந்த திருத்தணி ஆய்வாளர் தலைமையான  போலீசார் தம்பதியர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்தனர்.போலீசார் விசாரித்ததில் மேற்படி நபர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

    இவர்களிடமிருந்து போலியான அரசு அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், இரண்டு செல்போன்கள், சம்பவத்திற்குப் பயன்படுத்திய கார், மற்றும் பத்தாயிரம் பணம் மேலும் வெள்ளை தாள்கள் கைப்பற்றப்பட்டன கணவன் மனைவி இருவரையும் திருத்தணி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை விசாரணை செய்து இவர்கள் மீது புகாரினை பதிவு செய்து திருத்தணி போலீசார் இரவோடு இரவாக திருவள்ளூர் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி முன்பு ஆஜர் செய்து நீதிபதி உத்தரவின் பேரில் கணவன் மனைவி இருவரையும் சிறையில் அடைத்தனர்.

    செய்தியாளர் : சசிக்குமார் ( திருத்தணி)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Cheating, Cheating case, Crime | குற்றச் செய்திகள், DMK, Money, Thiruvallur

    அடுத்த செய்தி