முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தாயை இழந்த பச்சிளம் குழந்தை: தவறான ஊசியே இறப்புக்கு காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு!

தாயை இழந்த பச்சிளம் குழந்தை: தவறான ஊசியே இறப்புக்கு காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு!

தாயை இழந்த பச்சிளங்குழந்தை: அரசு மருத்துவர்களின் அலட்சியமே காரணமென குற்றச்சாட்டு!

தாயை இழந்த பச்சிளங்குழந்தை: அரசு மருத்துவர்களின் அலட்சியமே காரணமென குற்றச்சாட்டு!

ஊசி போட்ட சில நிமிடங்களில் மருத்துவமனையிலேயே அவர் மயக்கமடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் இருந்துள்ளார். இதையடுத்து அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னை எழும்பூரில் உள்ள மகப்பேறு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

  • Last Updated :

அரசு மருத்துவமனையில் பிரசவித்த பெண்ணுக்கு அலர்ஜி ஊசி போடப்பட்டதால் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருவள்ளூர் மாவட்டம் களக்காட்டூர் பகுதியைச் சேர்ந்த வினிதா என்ற பெண்மணி பிரசவத்திற்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கடந்த 20ஆம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார். 22ஆம் தேதி அவருக்கு மதியம் ஒரு மணி அளவில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

அதற்கு அடுத்த நாள் அவர் வீட்டுக்கு செல்ல வேண்டிய நேரத்தில் மருத்துவமனையில் உள்ள செவிலியர் ஒருவர் ஊசி ஒன்றை எடுத்து வந்து போட்டதாக கூறப்படுகிறது.

Also read: பாஜக சார்பில் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட்ட நபர் அடுத்தடுத்து மோசடி வழக்கில் கைது!

போடும் போதே தனக்கு இது தேவையில்லை என்று வினிதா மறுத்ததாகவும், ஆனால் வினிதா நடந்து கொண்டிருக்கும் போதே நிற்க வைத்து ஊசி போட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் ஊசி போட்ட சில நிமிடங்களில் மருத்துவமனையிலேயே அவர் மயக்கமடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் இருந்துள்ளார். இதையடுத்து அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னை எழும்பூரில் உள்ள மகப்பேறு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

இந்த நிலையில் இன்று மதியம் மாலை மூன்று மணிக்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை கையில் வைத்துக் கொண்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையின் தவறான சிகிச்சையே உயிரிழப்புக்கு காரணம் என்று வினிதாவின் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

Also read: தமிழகத்தில் குறைந்த கொரோனா பரவல்: குறையாத குழந்தைகள் பாதிப்பு அளவு..

இதுகுறித்து  அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த ஊசி எதற்காக போடப்பட்டது ஏன் கட்டாயப்படுத்தி போட்டார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உயிரிழந்த வினிதாவுக்கு ஐந்து வயதில் பெண் குழந்தை ஒருவர் இருக்கிறார். இது இரண்டாவது பிரசவமாகும்.

top videos

    இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு செய்வதறியாது திகைத்து நிற்கிறார் வினிதாவின் கணவர் ப்ரதீப்.

    First published:

    Tags: Thiruvallur