Home /News /tamil-nadu /

காவலர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்த தடை - ஆவடி காவல் ஆணையர் அதிரடி உத்தரவு

காவலர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்த தடை - ஆவடி காவல் ஆணையர் அதிரடி உத்தரவு

கோப்புப் படம்

கோப்புப் படம்

Avadi Police Commisionerate | பணி நேரத்தின்போது அரசு ஊழியர்கள் செல்போன் உபயோகப்படுத்துவதை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது.

  • News18
  • Last Updated :
    காவலர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று ஆவடி மாநகர காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.

    சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை, பணி நேரத்தின்போது அரசு ஊழியர்கள் செல்போன் உபயோகப்படுத்துவதை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

    இந்த நிலையில், காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோர் இனி பணிநேரத்தில் செல்போன் பயன்படுத்தக்கூடாது, மீறி பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பணி நேரத்தில் செல்போனில் அரட்டை அடிப்பவர்கள் மீது, அரசு ஊழியர் நடத்தை விதியின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  ஆவடி மாநகர காவல் ஆணையர்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    மேலும் இந்த சுற்றறிக்கையானது ஆவடி காவல் ஆணையாளர் அலுவலகம் மற்றும் காவல் துணை ஆணையர்கள் தலைமையிடம் ஆவடி , செங்குன்றம் மற்றும் மத்திய குற்றப்பிரிவு, போக்குவரத்து , ஆயுதப் படை காவல், காவல் ஆணையாளர் அலுவலகம் என அனைவருக்கும் தபால் வாயிலாக அனுப்பப்பட்டுள்ளது.

    -செய்தியாளர்: கன்னியப்பன்
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Police

    அடுத்த செய்தி