• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Pocso Arrested | திருவள்ளூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவி ஆய்வாளர் போக்சோவில் கைது...

Pocso Arrested | திருவள்ளூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவி ஆய்வாளர் போக்சோவில் கைது...

Youtube Video

திருவள்ளூர் மாவட்டத்தில் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் ஒருவரை போலீசார் போக்சோ சட்டபிரிவில் கைது செய்துள்ளனர். சிறுமியின் தாயாரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நடந்த கொடுமை அம்பலமானது எப்படி?

  • Share this:
    திருவள்ளூர் மாவட்டம் வெள்ளையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 37 வயதான சதீஷ்குமார். காசிமேடு காவல்நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றிவந்தவர் பணியில் சிறப்பாக செயல்பட்டதால் மாதவரம் துணை ஆணையரின் தனிப்படையில் பணியாற்றி வந்தார். துப்பாக்கி முனையில் கஞ்சா கும்பலை பிடித்தவர் சதீஷ் எப்போதும் புல்லட்டில் துப்பாக்கியுடன் சுற்றிவந்துள்ளார்.

    இந்நிலையில் கொரோனா தடுப்புப் பணிக்காக மாதவரம் பால்பண்ணை பகுதிக்கு நியாய விலை கடைகள் பாதுகாப்பு மற்றும் மக்கள் கூட்டத்தை தடுக்கும் பணிக்கு சென்றுள்ளார் உதவி ஆய்வாளர் சதீஷ்குமார். அப்போது அந்த குறிப்பிட்ட நியாவிலைக் கடையில் பணியாற்றும் ஏற்கனவே திருமணமான பெண்ணுடன் சதீஷ்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    பழக்கம் நாளடைவில் இருவருக்கும் காதலாக மலர்ந்து இருவரும் தனிமையில் இருக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. பெண்ணின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சென்று வரும் சதீஷை பெண்ணின் 15 வயது மகள் ஒருநாள் பார்த்து விடுகின்றார். அதனால் சிறுமியை துப்பாக்கிமுனையில் மிரட்டிய சதீஷ் சம்பவம் தொடர்பாக யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவேன் என்று கூறியதாக தெரிகின்றது.

    அதில் இருந்து சிறுமி வீட்டில் இருக்கும் போதே பெண்ணின் வீட்டிற்கு வரும் உதவி ஆய்வாளர் சதீஷ் பெண்ணுடன் தனிமையில் இருந்துள்ளார். இப்படி நாட்கள் செல்ல செல்ல பெண்ணின் மகளான 15 வயது சிறுமியிடமும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட தொடங்கியுள்ளார் சதீஷ்குமார்.

    சதீஷை சிறுமி எச்சரிக்கை செய்துள்ளார். அதனால் சிறுமியை தன் ஆசைக்கு இனங்க வைக்க விலை உயர்ந்த செல்போன், சிறுமியின் பிறந்நாளில் ஆடம்பர கேக் மற்றும் ஆடைகளை வாங்கி பரிசு கொடுத்துள்ளார் காவல் உதவி ஆய்வாளர் சதீஷ். ஒருகட்டத்தில் சிறுமியிடம் ஒரு லட்சரூபாய் ரொக்கமாக கொடுத்தவர் என்னுடன் காரில் வந்தால் உல்லாசமாக வாழலாம் என்று ஆசை வார்தைகளையும் குறியுள்ளார்.

    மேலும் படிக்க... இன்றைய காலை தலைப்புச் செய்திகள் (ஜூன் 26, 2021)

    சிறுமி பணத்தை வாங்க மறுக்கவே அவரின் தாய் பணத்தை பெற்றுக்கொண்டு நான் பார்த்து கொள்கின்றேன் என்று சதீஷிடம் சொல்லி அனுப்பியுள்ளார். பணம் பெற்ற விவகாரத்தை சிறுமியின் பெரியம்மாவான தனது சகோதரியிடம் சிறுமியின் தாய் குறியுள்ளார்.



    சிறுமியின் பெரியம்மாவும், தாயும் சேர்ந்து சிறுமியை பாலியல் தொந்தரவுக்கு உடன்பட்டு போக வற்புறுத்தியதாக தெரிகின்றது. பாதிக்கப்பட்ட சிறுமி என்ன செய்வதென்று தெரியாமல் இருந்துள்ளார். அப்போது சென்னை பி.எஸ்.பி.பி பள்ளியில் பாலியல் தொல்லைக்குள்ளான மாணவிகள் தொடர்பு கொள்ள காவல்துறையால் அறிவிக்கப்பட்ட எண்ணிற்கு தொடர்பு கொண்ட சிறுமி தனக்கு நடந்த கொடுமைகளை புகாராக தெரிவித்துள்ளதும் தெரியவந்துள்ளது. சிறுமியின் ரகசிய புகாரை பெற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி விசாரணை மேற்கொண்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதையடுத்து சிறுமியின் தந்தையிடம் புகார் பெற்று வழக்குப்பதிவு செய்து மாதவரம் மகளிர் போலீசார் உதவி ஆய்வாளர் சதீஷ்குமாரை சிறார்களுக்கு எதிரான போக்சோ பிரிவில் கைது செய்தனர். மேலும் சதீஷ்குமாருக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் மற்றும் சிறுமியின் பெரியம்மாவையும் போலீசார் கைது செய்துள்ளனர். ஆபத்தில் இருந்து பிள்ளைகளை காத்து வளர்க்க வேண்டிய தாயே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க உதவிய விவகாரம் மாதவரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: