Home /News /tamil-nadu /

திருமணத்தை மீறிய உறவு... அமமுக நகர செயலாளர் சிறையில் அடைப்பு

திருமணத்தை மீறிய உறவு... அமமுக நகர செயலாளர் சிறையில் அடைப்பு

ஜாகீர் அப்பாஸ்

ஜாகீர் அப்பாஸ்

பூந்தமல்லியில் திருமணத்தை மீறிய உறவு விவகாரத்தில் அமமுக நகர செயலாளர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

  • News18
  • Last Updated :
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஸ்ரீ நகர் பகுதியைச் சேர்ந்தவர்  மில்டன் ராஜதுரை. இவரது மனைவி ஸ்ரீஜா. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கொரோனா தடுப்பு கட்டுப்பாட்டுகள் காரணமாக பூந்தமல்லி அமமுக நகர செயலாளர் பதவியில் உள்ள  ஜாகீர் அப்பாஸ் வீடு வீடாகச் சென்று சிக்கன் கறி விநியோகம் செய்து வந்துள்ளார். அப்போது ராஜதுரை வீட்டிற்குச் சென்று சிக்கன் விநியோகம் செய்துவந்த நிலையில் அவரது மனைவி ஸ்ரீஜா மற்றும் ஜாகீர் அப்பாஸ் ஆகியோருக்கு தொடர்பு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மில்டன் ராஜதுரை மனைவியை கண்டித்து அவரது செல்போன் நம்பரை மாற்றியுள்ளார். இந்தநிலையில்  அடிக்கடி கணவன் மனைவி இருவருக்கும் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் ராஜதுரை அவரது மனைவியுடன் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த ஜாகீர் அப்பாஸ் ராஜதுரை மனைவியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் தன்னிடம் இருப்பதாக கூறி மில்டனிடம்  பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

Also read... சேலத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை - போக்சோ நீதிமன்றம் அதிரடி

இதனால் அங்கேயே  இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த  ஜாகீர் அப்பாஸ் மில்டன்  ராஜதுரையின் தலையில் கீழே கடந்த  கல்லால் பலமாக தாக்கியதில் பலத்த காயமடைந்த மில்டன் ராஜதுரை பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் பெற்று வருகிறார்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி காவல்  நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக  4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் அமமுக நகர செயலாளர் ஜாகீர் அப்பாஸை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அமமுக நகர செயலாளர் திருமணத்தை மீறிய தொடர்பு தகராறில் சிறை சென்றது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-செய்தியாளர்: சோமசுந்தரம்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Crime News, Illegal relationship

அடுத்த செய்தி