Home /News /tamil-nadu /

அதிமுக உட்கட்சி தேர்தலில் கோஷ்டி மோதல்... மனுதாக்கல் செய்தவரின் மண்டை உடைப்பு

அதிமுக உட்கட்சி தேர்தலில் கோஷ்டி மோதல்... மனுதாக்கல் செய்தவரின் மண்டை உடைப்பு

அதிமுக உட்கட்சி தேர்தலில் கோஷ்டி மோதல்

அதிமுக உட்கட்சி தேர்தலில் கோஷ்டி மோதல்

ADMK Inter Election | திருவள்ளூரில் அதிமுக நிர்வாகிகளுக்கான தேர்தலுக்கான விருப்ப மனு கடந்த 11ஆம் தேதி திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

திருவள்ளுர் அதிமுக உட்கட்சித் தேர்தலில் கோஷ்டி மோதல், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா முன்னிலையில் அதிமுக தொண்டர்கள் இருதரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவத்தின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது .

அதிமுக திருவள்ளூர்  மேற்கு மாவட்ட பகுதிக்கு உட்பட்ட  மாவட்ட ,ஒன்றிய, நகர ,பேரூராட்சி, அதிமுக நிர்வாகிகளுக்கான தேர்தலுக்கான விருப்ப மனு கடந்த 11ஆம் தேதி திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

Also Read : கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயி தற்கொலை - சடலத்துடன் மக்கள் சாலையில் போராட்டம்

அதில் திருவலாங்காடு ஒன்றிய செயலாளர்  பதவிக்கு  திருவள்ளூர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் கொட்டாமேடு கோபாலகிருஷ்ணன் விருப்ப மனு தாக்கல் செய்ய வந்தார். அப்போது அவரை தற்போது திருவலாங்காடு ஒன்றிய கழக செயலாளர் சக்திவேல் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் தேர்தல் நடைபெற்ற இடத்திலேயே  விருப்ப மனு தாக்கல் செய்யவிடாமல் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோ ஹரி முன்னிலையில் நாற்காலி கொண்டும்  கைகளாலும் சரமாரியாக தாக்கிய  வீடியோ  ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

அதன் பின்னால் தலையில் கட்டு போட்டவாறு  வந்து மீண்டும் திருவலாங்காடு ஒன்றிய செயலாளர் பதவிக்கு கோட்டைமேடு கோபாலகிருஷ்ணன் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

செய்தியாளர் : பார்த்தசாரதி, திருவள்ளூர்
Published by:Vijay R
First published:

Tags: ADMK, Thiruvallur

அடுத்த செய்தி