திருவள்ளூர் அருகே பச்சிளம் ஆண் குழந்தையை 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற தாய்; கணவரின் புகாரில் துரிதமாக செயல்பட்ட காவல்துறையினர் காரில் குழந்தையை வாங்கிக் கொண்டு சென்றவர்களிடம் இருந்து மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த மப்பேடு போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் சத்தரை கிராமத்தைச் சேர்ந்த நம்பிராஜ் (35), சந்திரா (29) இருவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி, மூர்த்தி என்ற மகனும், மதுமிதா என்ற மகளும் உள்ளனர். சந்திரா ஒப்பந்த முறையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். நம்பிராஜ் ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி மூன்றாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது. நம்பிராஜ் குழந்தையை பார்க்க சென்றுள்ளார். குழந்தை ஆரோக்கியமாக இருப்பதைக் கண்டு மகிழ்ந்த அவர், வேலைக்கு சென்றுள்ளார் . இந்நிலையில், நேற்று சந்திரா நம்பி ராஜிக்கு போனில் அழைத்து, குழந்தை உடல் நலக் குறைவாக உள்ளதாக கூறி பின்னர் குழந்தை இறந்து விட்டதாக கூறியுள்ளார்.
ஆரோக்கியமாக இருந்த குழந்தை எப்படி இறந்தது என்று கேட்டபோது சந்திரா, முன்னுக்கு பின் முரணாக சொல்லியுள்ளார். பின்னர், மருத்துவமனைக்குச் சென்ற நம்பிராஜ் மற்றும் அவரது உறவினர்கள் குழந்தை பற்றி விசாரித்துள்ளனர். மருத்துவமனை தரப்பில் குழந்தை நலமுடன் டிஸ்சார்ஜ் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் சந்தேகம் அடைந்த நம்பிராஜ், காவல் துறை அவசர எண் 100-க்கு அழைத்து புகார் அளித்தார். பின்னர் B6 காவல்நிலைய உதவி ஆய்வாளர் இளங்கோ மற்றும் சந்திரசேகர் அண்ணாமலை ஆகியோர் சந்திராவிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் சந்திரா தனது மூன்றாவது குழந்தையை 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது தெரியவந்தது.
Must Read : பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழா - தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு
அதனைத் தொடர்ந்து, சந்திரா கூறிய தகவலின் அடிப்படையில், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் காரில் கடத்தப்பட்ட குழந்தையை ஒரு மணி நேரத்தில் குழந்தையை மீட்ட போலீசார் தந்தையிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில், விரைந்து சென்று குழந்தையை மீட்ட மப்பேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் இளங்கோ மற்றும் உதவி காவலர் அனைவரையும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.
செய்தியாளர் - பார்த்தசாரதி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Baby Sale, Mother, Police, Thiruvallur