திருத்தணி அருகே அங்கன்வாடி மைய கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 வயது சிறுவனுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
திருத்தணி தாலுக்கா பூனி மாங்காடு காலனியில், அங்கன்வாடி செயல்பட்டு வருகிறது. இங்கு 18- பெண் குழந்தைகளும், 17 ஆண் குழந்தைகளும் பயின்று வருகிறார்கள். இந்த அங்கன்வாடி பள்ளியில் சாந்தி என்ற ஆசிரியரும் சமையல் உதவியாளராக அம்முலு என்பவரும் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று திடீரென அங்கன்வாடி பள்ளி மேற்கூரை சிமெண்ட் தளம் இடிந்து விழுந்துள்ளது. பள்ளியில் அப்போது 25 மாணவர்கள், மாணவிகள் இருந்துள்ளனர். இவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பியுள்ளனர்.
ஆனால் அங்கன்வாடியில் படுத்திருந்த விமல்ராஜ் வயது(05) என்ற குழந்தை இந்த மேற்கூரை இடிந்து விழுந்ததில் தலையில் பலத்த ஏற்பட்டது. பின்னர் பூனி மாங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு அரசு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
Also read... பால் காய்ச்சிய போது அலட்சியம்... கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதால் பரபரப்பு
இந்த சம்பவம் குறித்து திருவலாங்காடு வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த அங்கன்வாடி பள்ளி கட்டிடத்தை அகற்றி புதிய கட்டடம் கட்டித் தரவேண்டும் என்று குழந்தைகளின் பெற்றோர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்கள்.
-செய்தியாளர்: சசி குமார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anganvadi