ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Lockdown | ஊரடங்கால் திருவள்ளூரில் கள்ளச்சந்தையில் மதுபானங்கள் விற்பனை செய்த 5 பேர் கைது

Lockdown | ஊரடங்கால் திருவள்ளூரில் கள்ளச்சந்தையில் மதுபானங்கள் விற்பனை செய்த 5 பேர் கைது

மாதிரி படம்

மாதிரி படம்

திருவள்ளூர் அருகே ஊரடங்கு காரணமாக நேற்று மதுபானக்கடைகள் திறக்கப்படாத நிலையில் மதுபாங்களை கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 5 பேர் கைது 500 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரடங்கு காரணமாக அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டு இருந்த நிலையில் சோழவரம் விஜய நல்லூர் சுங்கச்சாவடி அருகே மது விற்பனை செய்வதாக வந்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் அங்கு சோதனை  செய்தனர். அப்போது அங்கு பரதன், சொக்கலிங்கம் என்ற 2 பேர்

  மது பாட்டில்களை விற்பனை செய்துக் கொண்டிருந்தனர். உடனே அவர்களை கையும் களவுமாக கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 220 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

  மேலும் பொன்னேரி அருகே பெரிய மாங்கோடு பகுதியில் இதேபோல விற்பனை செய்து கொண்டிருந்த சீனிவாசன் மணிகண்டன் ஆகியோரிடமிருந்து 230 மது பாட்டில்களும்

  மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த பன்னீர் என்பவரிடம் இருந்து 5 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

  மேஉம் படிக்க... Oxygen Demand | கோவையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உருக்காலை தொழில் பாதிப்பு

  அதனைதொடர்ந்து அவர்கள 5 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் பிறகு மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார், டாஸ்மாக் மண்டல மேலாளர் உரிய முறையில் ஆய்வு செய்து கள்ளச்சந்தையில் மது விற்பனையை தடை செய்ய வேண்டும் எனவும் அவர்களை உடனே கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Lockdown, Thiruvallur