காய்ச்சலில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை - சென்னையில் சோகம்

கோப்புப்படம்

மூவரும் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநராக இருந்து ஓய்வு பெற்ற மல்லிகேஸ்வரியின் சகோதரர் வெங்கட்ராமனின் ஆதரவில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது

 • News18
 • Last Updated :
 • Share this:
  சென்னை அருகே திருமுல்லைவாயில் பகுதியில் காய்ச்சல் காரணமாக பயத்தால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  ஆவடி அருகே திருமுல்லைவாயிலைச் சேர்ந்த 74 வயதான டில்லி, அவரது மனைவி மல்லிகேஸ்வரி, அவர்களது மகள் நாகேஸ்வரி ஆகியோர் வீட்டில் உள்ள ஃபேன் கொக்கிகளில் தனித்தனியாக புடவையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

  இவர்கள் மூவரும் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநராக இருந்து ஓய்வு பெற்ற மல்லிகேஸ்வரியின் சகோதரர் வெங்கட்ராமனின் ஆதரவில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கடந்த ஒரு வாரமாக 3 பேருக்கும் காய்ச்சல் இருந்ததாகவும், அருகே உள்ள மருந்துக் கடையில் மருந்து வாங்கி சாப்பிட்டு வந்ததாகவும் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.

  Also read... கொரோனா தொற்றில் இருந்து மீண்ட 80வயது முதியவர் - கருப்பு பூஞ்சை பயத்தால் தற்கொலை செய்துக்கொண்ட பரிதாபம்

  காய்ச்சல் அதிகமானதால் மூவரும் தற்கொலை செய்து கொண்டதாக காவல்நிலையத்தில் வெங்கட்ராமன் புகார் அளித்திருந்தார். 3 பேரின் சடலத்தை மீட்டுள்ள திருமுல்லைவாயில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

  சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published: