காய்கறி வியாபாரியாக மாறிய தேமுதிக வேட்பாளர்

காய்கறி வியாபாரியாக மாறிய தேமுதிக வேட்பாளர்

கிருஷ்ணமூர்த்தி

டீ விற்பனை செய்தும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார் கிருஷ்ணமூர்த்தி...

  • Share this:
    திருத்தணி வார சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்தும் டீக்கடையில் டீ மாஸ்டராக டீ போட்டும்  பிரச்சாரம் செய்யும் தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி.

    திருவள்ளூர் மாவட்டம் அமமுக-தேமுதிக  கூட்டணியில்  திருத்தணி தொகுதி தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டு  தொகுதியின் வேட்பாளராக கிருஷ்ணமூர்த்தி நிறுத்தப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், தொகுதிக்கு உட்பட்ட ஆர்.கே. பேட்டை பகுதியில் செவ்வாய்க் கிழமை வார சந்தை நடைபெறுவது வழக்கமாக உள்ள நிலையில், அப்பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி சந்தைக்குச் சென்று தக்காளி வெங்காயம் காய்கறிகளை விற்பனை செய்து முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

    Must Read : 1 கோடி ரூபாய் பறிமுதல்: எம்.எல்.ஏ. கார் ஓட்டுனர் உள்ளிட்ட 4 பேர் கைது

     

    அத்துடன்,  திருத்தணி பகுதியில் இருக்கும் டீ கடையில், டீ மாஸ்டராக டீ  விற்பனை செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருடன், கூட்டணி கட்சியினரும் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர்.

    இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று கும்மிடிப்பூண்டி, திருத்தணி பகுதிகளில் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    - திருத்தணி செய்தியாளர்,  சசிகுமார்
    Published by:Suresh V
    First published: