திருப்பூர்: பெண் குழந்தையை விட்டு செல்ல இடமில்லாததால் குப்பை கூடையில் அமர வைத்து பணியாற்றும் தூய்மை பணியாளர்

திருப்பூர்: பெண் குழந்தையை விட்டு செல்ல இடமில்லாததால் குப்பை கூடையில் அமர வைத்து பணியாற்றும் தூய்மை பணியாளர்
குப்பை கூடையில் மகளுடன் பணிக்கும் செல்லும் தாய்
  • Share this:
திருப்பூரில் வடமாநில பெண் ஒருவர் பெண் குழந்தையை விட்டு செல்ல இடமில்லாததால் குப்பை கூடையில் அமரவைத்து அவருடன் அழைத்து சென்றுள்ளார்.

மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சுஜா என்பவர் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ளார். இவரது 3 வயது மகள் பொட்டு-வை விட்டு செல்ல இடம் இல்லாததால் குழந்தையை அழைத்துக் கொண்டு சுஜா துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ளார்.
குப்பை தள்ளுவண்டி வாகனத்தில் குப்பை கூடையில் குழந்தையை அமர வைத்து எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி சுஜா துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ளார். இந்த நிகழ்வு காண்போர் மனதை கலங்க வைத்துள்ளது. கொரோனா பரவல் காலத்திலும் துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்காமல் இருக்கும் அவல நிலையை எடுத்துக் காட்டுவதாகவும் அமைந்துள்ளது.
First published: July 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading