ஆப் மூலம் ஓரின சேர்க்கைக்கு அழைத்து வழிபறியில் ஈடுபடும் கும்பல் கைது

வழிப்பறி சம்பவத்தின் பின்னணியில் டேட்டிங் செயலியான grindr app -க்கு முக்கிய பங்குள்ளதை போலீசார் கண்டறிந்தனர்.

ஆப் மூலம் ஓரின சேர்க்கைக்கு அழைத்து வழிபறியில் ஈடுபடும் கும்பல் கைது
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: August 22, 2019, 5:32 PM IST
  • Share this:
திருப்பூரில் ஆபாச செயலி மூலமாக ஓரின சேர்க்கைக்கு வரவழைத்து வழிபறியில் ஈடுபடும் இளைஞர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மாதத்தில் மட்டும் 50 வயதிற்கு மேற்பட்ட 3 நபர்களிடம் நகை, பணம் பறித்த சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்ததாக புகார்கள் பதிவாகின.

பணத்தை பறிகொடுத்தவர்கள் புகார்கள் மாறி மாறி இருந்தபோதும் பணம் பறிக்கப்பட்ட முறை ஒரே மாதிரியாக இருந்ததால் போலீசார் சந்தேகம் அடைந்தனர்.


வழிப்பறி நடந்த இடங்களில் சிசிடிவி எதுவும் இல்லாததால், புகார்தாரர்களிடம் மீண்டும் விசாரணை நடத்தினர். அப்போது போலீசாருக்கு திடுக்கிடும் தகவல் கிடைத்தது.

வழிப்பறி சம்பவத்தின் பின்னணியில் டேட்டிங் செயலியான grindr app -க்கு முக்கிய பங்குள்ளதை போலீசார் கண்டறிந்தனர்.

grindr app-ல் செல்போன் நம்பருடன் தங்கள் வயதை பதிவிட்டு, அதே ஆப்பில் ஓரினச்சேர்க்கைக்கு ஆள் தேடும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களிடம் ஆசையை தூண்டும் விதமாக பேசி இளைஞர்கள் சிலர் வலை விரித்துள்ளனர்அப்படி அவர்களிடம் சிக்கிய நபர்களை சிசிடிவி எதுவும் இல்லாத மறைவான இடத்திற்கு வரவழைத்துள்ளனர்.

இளைஞர் ஒருவர் முதலில் அறிமுகமாகி பேசுவார், அப்போது மறைந்திருக்கும் மற்ற இருவர் அந்த நபரை தாக்கி அவரது நகை, பணம், ஏடிஎம் கார்டுகளை பறித்துக் கொண்டு தப்பிவிடுவார்கள்

இதை அடுத்து grindr appல் அந்த இளைஞர்கள் அளித்திருந்த செல்போன் எண்களை வைத்து பிரதீப், சபரி மற்றும் 17 வயது சிறுவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிரிண்டர் ஆப் மூலமாக அறிமுகமாகும் நபர்களை நம்பி யாரும் எங்கேயும் செல்ல வேண்டாம் என திருப்பூர் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

Also see...

First published: August 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்