டிக்டாக் காதலர்களுடன் மனைவி, மகள் எஸ்கேப்... வீடியோ வெளியிட்டு கணவர் தற்கொலை

திருப்பூரில், டிக் டாக் மூலம் மனைவிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டு பிரிந்ததாலும், மகள் காதலனுடன் சென்று விட்டதாலும், மனமுடைந்த குடும்பத் தலைவர் வீடியோ பதிவிட்டு விட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  • Share this:
திருப்பூர் பொம்மநாயக்கன்பாளையத்தை அடுத்த ஜி.என்.பாலன் நகரைச் சேர்ந்தவர்கள் 44 வயது ரவி - 35 வயது கனகவள்ளி தம்பதிஇந்த தம்பதிக்கு 16 வயதில் மகளும், 15 வயதில் மகனும் உள்ளனர்.

திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகில், ஆட்டோ ஒர்க் ஷாப் நடத்தி வந்தார் ரவி.  கடந்த 3ம் தேதி கனகவள்ளி மற்றும் அவரது மகள் காணாமல் போனதாக அனுப்பர் பாளையம் காவல்நிலையத்தில் ரவி புகாரளித்தார்

போலீசார் விசாரணையில் இருவரும் பெரியார் நகரில் உள்ள ஒரு மகளிர் விடுதியில் தங்கியிருந்தது தெரியவந்தது.  காவல்நிலையம் வரவழைத்து அவர்களிடம் போலீசார் விசாரித்ததில், கனகவள்ளி தனது கணவர் ரவியுடன் செல்ல மறுத்து விட்டு தாய் வீட்டிற்கு செல்வதாகக் கூறி விட்டார்.


ஆனால், கனகவள்ளியும் அவரது மகளும், மீண்டும் அதே மகளிர் விடுதிக்கு சென்று விட்டனர். இதையறிந்த ரவி, கடந்த 24ம் தேதி அங்கு சென்று தன்னுடன் வருமாறு இருவரிடமும் கெஞ்சியுள்ளார்.

ஆனால் அவர்கள் வர மறுத்ததுடன் அவரை தரக்குறைவாகப் பேசி திட்டியுள்ளனர். இதனால் கடுமையான மனஉளைச்சல் அடைந்த ரவி, வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கு முன் அவர் தனது சகோதரிகளுக்கு அனுப்பி வைத்த வீடியோவில், மனைவி தன்னுடன் வாழ மறுத்ததால் வேறு வழியின்றி தற்கொலை முடிவெடுத்ததாகக் கூறியுள்ளார்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கனகவள்ளிக்கு டிக் டாக் மூலம் ஒரு தனியார் நிறுவன ஊழியருடன் பழக்கம் ஏற்பட்டு அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

அதேபோல், ரவியின் 16 வயது மகளுக்கும் ஈரோடு சூரம்பட்டியைச் சேர்ந்த அருண்குமார் என்ற இளைஞருடன் காதல் ஏற்பட்டுள்ளது. தாயும், மகளும் தங்கள் காதலர்களுடன் எந்நேரமும் செல்போனில் அரட்டை அடித்து வந்ததாகக் கூறப்படுகிறது

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இதுபற்றி தெரியாமல் இருந்த ரவிக்கு சமீபத்தில் தெரியவந்ததும் அவர் கண்டித்துள்ளார். ஆனால் இருவரும் தங்கள் காதலர்களுடன் தான் வாழ்வோம் எனக் கூறிவி்ட்டு மகளிர் விடுதிக்கு சென்று வி்ட்டதாகக் கூறப்படுகிறது

இதனால் தான் மனமுடைந்த ரவி, தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்கின்றனர் போலீசார்.

ரவியின் இறுதி வாக்குமூலம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள அனுப்பர்பாளையம் போலீசார், கனகவள்ளி மற்றும் அவர் தொட்ரபான நபர்களுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.




மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050




 
First published: August 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading