Home /News /tamil-nadu /

திருப்பூரில் கொடூரம்... மது கேட்டுச் சென்ற சிறுவர்களுக்கு அறிவுரை கூறிய கூலித்தொழிலாளி வெட்டிக்கொலை...!

திருப்பூரில் கொடூரம்... மது கேட்டுச் சென்ற சிறுவர்களுக்கு அறிவுரை கூறிய கூலித்தொழிலாளி வெட்டிக்கொலை...!

"தென்னம்பாளையம் சந்தையில் உள்ள சிசிடிவி கேமராவில் கூலி தொழிலாளி வீராவை சிறுவர்கள் கௌதம் மற்றும் அவரது நண்பர்கள் துரத்தி தாக்குவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது"

  • News18
  • Last Updated :
மது கேட்டு சென்ற சிறுவர்களுக்கு அறிவுரை கூறிய கூலி தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் கூலித்தொழிலாளியை சிறுவர்கள் இணைந்து வெட்டுகின்ற சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன

திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையில் கடந்த 6 -ம் தேதி கூலித் தொழில் செய்து வந்த வீரா என்பவர் மர்ம நபர்களால் வெட்டப்பட்ட நிலையில் அங்கிருந்த பிளாக் மாரியம்மன் கோவிலில் சடலமாக மீட்கப்பட்டார் . இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கௌதம் சஞ்சய் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.

இந்நிலையில் கொலைக்கான காரணம் குறித்து அவர்களிடம் விசாரிக்கையில் ஊரடங்கு தினமான கடந்த 5-ம் தேதி தென்னம்பாளையம் மார்க்கெட் பகுதிகளில் எங்கே மது கிடைக்கும் என அவர்கள் தேடிக் கொண்டிருந்த சூழ்நிலையில் வீராவிடம் அது குறித்து விசாரித்துள்ளனர் .

அப்போது வீரா அவர்களுக்கு அறிவுரை கூறிய நிலையில் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் கையில் வைத்திருந்த ஆயுதங்களோடு வீராவை தாக்கியுள்ளனர். இதில் ரத்த காயங்களுடன் வீரா, சிறிது தூரம் நடந்து சென்று கோவிலில் சரிந்து விழுந்து இறந்துள்ளார்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது தென்னம்பாளையம் சந்தையில் உள்ள சிசிடிவி கேமராவில் கூலி தொழிலாளி வீராவை சிறுவர்கள் கௌதம் மற்றும் அவரது நண்பர்கள் துரத்தி தாக்குவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube

Published by:Sankar
First published:

Tags: Crime | குற்றச் செய்திகள், Lockdown, Tiruppur

அடுத்த செய்தி