நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி திருப்பூரில் இன்றும் நாளையும் (மே16, 17) பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளதால், நாள் ஒன்றுக்கு 250 கோடி ரூபாய் உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில், 10 லட்சம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றனர். இதனால் 20 ஆயிரம் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
நூல் விலை 480 ரூபாய் என வரலாறு காணாத உச்ச நிலையை அடைந்துள்ளது. இதனால் பின்னலாடை மற்றும் ஜவுளி உற்பத்தி தொழில் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன. இதனால் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், மத்திய அரசு நூல் மற்றும் பருத்தி ஏற்றுமதி தடை செய்து அறிவிக்க வேண்டும் என கோரி இன்றும் நாளையும் பின்னலாடை உற்பத்தியாளர்களின் அனைத்து சங்கங்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
இதன் காரணமாக திருப்பூரில் உள்ள 20 ஆயிரம் பனியன் நிறுவனங்கள் மூடப்படுகிறது. 10 லட்சம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், நாளொன்றுக்கு 250 கோடி ரூபாய் மதிப்பிலான பனியன் உற்பத்தி பாதிக்கப்படும் என கருதப்படுகிறது.
Must Read : திருவண்ணாமலையில் திடீரென பெய்த மழை.. குடை பிடித்து கிரிவலம் சென்ற பக்தர்கள்
இந்த வேலை நிறுத்தத்திற்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் விசைத்தறி நிறுவனங்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.