தீபாவளி போனஸை உயர்த்த வேண்டும்: திருப்பூர் பின்னலாடை தொழிலாளர்கள் கோரிக்கை

டாலர் மதிப்பு உயர்வால் தற்போதுதான் புதிய ஏற்றுமதி ஆர்டர்கள் கிடைக்கப் பெற்று பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த ஆர்டர்கள் சென்ற பிறகே திருப்புர் மீண்டும் பழைய நிலையை அடையும் என்கின்றனர்.

தீபாவளி போனஸை உயர்த்த வேண்டும்: திருப்பூர் பின்னலாடை தொழிலாளர்கள் கோரிக்கை
ஆலையில் வேலை செய்யும் தொழிலாளர்கள்
  • News18
  • Last Updated: October 17, 2018, 11:17 AM IST
  • Share this:
திருப்பூரில் கூடுதலாக போனஸ் வழங்க வேண்டும் என பின்னலாடைத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் உற்பத்தியாளர்கள் கடந்த ஆண்டு வழங்கிய போனஸைதான் வழங்க முடியும் என தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் என்றாலே, நினைவுக்கு வருவது பின்னலாடை நிறுவனங்கள்தான். இந்த துறையில் நேரடியாக 5 லட்சம் தொழிலாளர்களும், உப தொழில் பிரிவுகளான டையிங், பிரிண்டிங், எம்பிராய்டிங், டிசைனிங் ஆகியவற்றில் 5 லட்சம் தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.

பின்னலாடை தொழிலில் பிற மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும், வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை தங்கள் சொந்த ஊருக்குச் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணம் தீபாவளி பண்டிகையின் போது வழங்கப்படும் போனஸ்தான். ஏனென்றால் ஆண்டு முழுவதும் பணியாற்றும் பணியாளர்களுக்கு பின்னலாடை நிறுவனங்கள் திபாவளிக்கு சிறந்த முறையில் போனஸ் வழங்கி வருகின்றன.


பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி என நலிவடைந்திருந்த பின்னலாடை துறை, தற்போது டாலர் மதிப்பு உயர்வின் காரணமாக புதிய ஆர்டர்கள் பெறப்பட்டு புதிய உத்வேகத்துடன் பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தீபாவளி போனஸை அதிகரித்து வழங்குவதோடு, 10 நாட்களுக்கு முன்னதாகவே வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொழிலாளர்கள் மட்டுமே இத்துறையின் வளர்ச்சிக்கு காரணம் எனக் கூறும் உற்பத்தியாளர்கள், டாலர் மதிப்பு உயர்வால் தற்போதுதான் புதிய ஏற்றுமதி ஆர்டர்கள் கிடைக்க பெற்று பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த ஆர்டர்கள் சென்ற பிறகே திருப்பூர் மீண்டும் பழைய நிலையை அடையும் என்கின்றனர்.

எனவே, கடந்த ஆண்டு வழங்கிய போனஸ் தொகையை இந்த ஆண்டும் வழங்குவதற்கு அனைத்து நிறுவனங்களுக்கும் அறிக்கை அனுப்பியுள்ளதாகவும் லாபம் ஈட்டிய சில நிறுவனங்கள் போனஸ் தொகையை உயர்த்தி தர அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.ALSO SEE...

நவராத்திரி பிரம்மோற்சவம்: அனுமந்த வாகனத்தில் திருப்பதி மலையப்ப சுவாமி
First published: October 17, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading