• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஆசிரியர்கள் போராட்டத்தால் முடங்கிய பள்ளி.. மாணவர்களுக்கு பாடம் நடத்த உதவிய விஜய் ரசிகர்கள்..

ஆசிரியர்கள் போராட்டத்தால் முடங்கிய பள்ளி.. மாணவர்களுக்கு பாடம் நடத்த உதவிய விஜய் ரசிகர்கள்..

ரசிகர் மன்றங்களால் ஆக்கப்பூர்வமானப் பணிகளையும் செய்ய முடியுமென நிரூபித்துள்ளார்கள்.

  • Last Updated :
  • Share this:
ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் பாதிக்கப்பட்ட பள்ளி ஒன்றில் விஜய் ரசிகர்கள் 2 ஆசிரியர்களை நியமித்து பாடம் நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் சின்னியகவுண்டன் புதூரில் உள்ள ஆரம்ப பள்ளியில் 1 முதல் 5 வகுப்பு வரையில் 94 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் இரண்டாவது நாளாக ஆசிரியர்கள் வராத நிலையில் பூட்டப்படும் தருவாயில் இருந்தது அப்பள்ளி.



ஆரம்பப்பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கக் கூடாது என எண்ணிய அந்த ஊரின் விஜய் ரசிகர்கள் புதிய ஐடியா ஒன்றை செயல்படுத்தினர். விஜய் ரசிகர்கள் அனைவரும் இணைந்து இரண்டு ஆசிரியர்களை அப்பள்ளியில் நியமித்து பாடம் நடத்த ஏற்பாடு செய்தனர்.

அந்த இரண்டு ஆசிரியர்களுக்கும் ஊதியம் வழங்க ரசிகர்களே இணைந்து பணம் சேர்த்துள்ளனர். ரசிகர் மன்றங்களால் ஆக்கப்பூர்வமானப் பணிகளையும் செய்ய முடியுமென ரசிகர்கள் நிரூபித்துள்ளார்கள் என அப்பகுதி மக்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பார்க்க: உதவி இயக்குனர்களின் வேடந்தாங்கல் சாலிகிராமம் காவேரி டீக்கடை

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rahini M
First published: