Fried Rice சாப்பிட்டு உறங்கிய 2 குழந்தைகள் உயிரிழந்தது எப்படி?

Youtube Video

திருப்பூர் மாவட்டத்தில் இரவு உணவாக ஃப்ரைட் ரைஸ் சாப்பிட்டுவிட்டு உறங்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று குழந்தைகளில் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

  • Share this:
    நேபாளத்தை நாட்டை சேர்ந்தவர்கள் 32 வயதான சந்தோஷ், மற்றும் அவரது மனைவி 25 வயதான ஆர்த்தி. இந்த தம்பதிக்கு 7 வயதில் பிரையன் என்ற மகனும் , 4 வயதில் பிரியங்கா என்ற மகளும்,3 வயதில் அனில் என்ற மகனும் இருந்தனர். இந்த தம்பதி குழந்தைகளுடன் திருப்பூர் அவிநாசி சாலை தண்ணீர் பந்தல் பகுதியில் வாடகைவீடெடுத்து வசித்து வருகின்றனர். சந்தோஷ் அதே பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் சப்ளையராக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் செவ்வாய் கிழமை இரவு ,ஹோட்டலில் இருந்து ப்ரைட் ரைஸ் கொண்டு வந்து குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார் சந்தோஷ். அதனை சாப்பிட்ட குழந்தைகள் மூவரும் உறங்கியுள்ளனர். இரவில் 11 மணியளவில் மூத்த மகன் பிரையன் மூச்சு இல்லாமல் படுக்கையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வீட்டில் இருந்த மற்ற இரண்டு குழந்தைகள் உறங்கியதால் அருகில் இருந்தவர்களை பார்த்துக்கொள்ளும் படிசொல்லிசென்றனர்.

    மருத்துவமனையில் பிரையனை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் குழந்தையின் உடலை காலையில் தான் ஒப்படைப்போம் என்று மருத்துவர்கள் தெரிவித்ததால், மற்ற குழந்தைகளை கவனிக்க ஆர்த்தி மட்டும் மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார்.

    அப்போது இரண்டாவது பெண்குழந்தையான பிரிங்காவும் எந்த அசைவும் இல்லாமல் படுத்திருப்பதை பார்த்த ஆர்த்தி அதிர்சியடைந்து கத்திகதறியுள்ளார். குழந்தையை மீட்ட அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர், அவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் பிரியங்காவும் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

    ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகளை அடுத்தடுத்து இறந்த சம்பவம் மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியது . சம்பவ இடத்திற்கு வந்த வேலம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குழந்தைகளின் உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகு தான் குழந்தைகளின் இறப்பிற்கான காரணம் தெரியவரும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இரவு ஆசையாக ஃப்ரைட் ரைஸ் சாப்பிட்டு விட்டு உறங்கிய குழந்தைகள் அடுத்தடுத்து உழிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Published by:Vijay R
    First published: