• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • உரிமை கோரப்படாத உடலை நல்லடக்கம் செய்த திருப்பூர் காவலர்... குவியும் பாராட்டுகள்

உரிமை கோரப்படாத உடலை நல்லடக்கம் செய்த திருப்பூர் காவலர்... குவியும் பாராட்டுகள்

உரிமை கோரப்படாத உடலை நல்லடக்கம் செய்தார் திருப்பூர் காவலர் மயில்சாமி.

உரிமை கோரப்படாத உடலை நல்லடக்கம் செய்தார் திருப்பூர் காவலர் மயில்சாமி.

பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் மயில்சாமி தனது சொந்த முயற்சியில் தன்னார்வ அமைப்பினர் உதவியுடன் கோவை ஆத்துப்பாலம் பகுதியில் உடலை நல்லடக்கம் செய்தார்.

  • Share this:
உரிமை கோரப்படாத உடலை நல்லடக்கம் செய்த காவலருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் மண் தோட்டம் அருகே கடந்த 6ம் தேதி அன்று கோவையிலிருந்து சேலம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஜோசப் (60) என்பவர் சாலை விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார்.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 9ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து பெருமாநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்ட னர். அதில் ஜோசப் கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.



எனினும், யாரும் அவரது உடலை உரிமை கோராத நிலையில், உறவினர்களும் அவரது உடலைப் பெற்றுக்கொள்ள மறுத்ததால் பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் மயில்சாமி தனது சொந்த முயற்சியில் தன்னார்வ அமைப்பினர் உதவியுடன் கோவை ஆத்துப்பாலம் பகுதியில் உடலை நல்லடக்கம் செய்தார். காவலரின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: