திருப்பூர் மக்களை அச்சத்தில் ஆழ்த்திய மர்ம வெடிசப்தம் - காரணம் இதுதான்

திருப்பூர் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய வெடிசப்தம் குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்துள்ளார்.

திருப்பூர் மக்களை அச்சத்தில் ஆழ்த்திய மர்ம வெடிசப்தம் - காரணம் இதுதான்
திருப்பூர்
  • Share this:
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று காலை 10.30 மணி அளவில் மிகப்பெரிய ஓசையுடன் வெடி சப்தம் எழுந்தது. இதன் தொடர்ச்சியாக சில இடங்களில் வீடுகள் குலுங்கி நில அதிர்வும் ஏற்பட்டதாக பொதுமக்கள் பீதி அடைந்தனர். முதலில் தங்கள் பகுதியில் மட்டுமே இந்த சத்தம் கேட்டதாக பலரும் நினைத்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த வெடிச்சத்தம் உணரப்பட்டது.

குறிப்பாக திருப்பூர் மாநகராட்சி பகுதிகள் மங்கலம், பெருமாநல்லூர், ஊத்துக்குளி, காங்கேயம், குண்டடம், பல்லடம் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த வெடி சப்தமானது உணரப்பட்டது தெரியவந்தது. இந்த வெடி சத்தம் நில அடுக்குகள் பிளவின் காரணமாக ஏற்பட்டுள்ளதாகவும், பின்னலாடை சாய நிறுவனங்களின் பாய்லர் வெடித்து ஏற்பட்ட சப்தம் எனவும் பலவிதமான வதந்திகள் உலா வரத் துவங்கியது.

மேலும் பொதுமக்களிடையே இந்த சப்தமும் அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட நில அதிர்வும் கடுமையான பீதியையும் ஏற்படுத்தியது. வீடுகளை விட்டு வீதிகளுக்கு இறங்கிவந்த மக்கள் கூட்டம் கூட்டமாக இந்த சப்தம் தொடர்பாக பேசி அஞ்சி வந்தனர். மக்களின் தொடர் அச்சம் காரணமாக வெடி சப்தம் ஏற்பட்டது எப்படி என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் விஜய கார்த்திகேயன் தனது ட்விட்டர் பதிவின் மூலமாக விளக்கம் அளித்துள்ளார்.


அதன்படி கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள தேஜஸ் விமானம் ஒலியின் வேகத்தில் செல்லக் கூடிய வல்லமை கொண்டது. இதன் வேகம் காரணமாக நடுவானில் எழும் சப்தம் பல பகுதிகளிலும் எதிரொலிக்கும் இந்த விமானம் தற்போது சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து தேஜஸ் விமானம் பயிற்சி மேற்கொண்டு வருகிறது.அவ்வாறு திருப்பூர் வான்பரப்பில் இந்த விமானம் சென்ற போது எழுந்த சோனிக் பூம் சப்தம் தான் மாவட்டம் முழுவதும் உணரப்பட்டது என தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTubeFirst published: May 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading